வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இ பாஸ் இணையதளம் செயல்படவில்லை | சென்னை செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மக்கள் அவதி | Epass Not Working | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 18, 2020

இ பாஸ் இணையதளம் செயல்படவில்லை | சென்னை செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மக்கள் அவதி | Epass Not Working | Vil Ambu News

நாளை முதல் 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 4 மாவட்டங்களில் இ பாஸ் இணையதளம் செயல்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.




சென்னையில் 35,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



4 மாவட்டங்கள் இந்த நிலையில் கொரோனா அதிகம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அரசு அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோர் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.





இபாஸ் இதையடுத்து அனைத்து கிராம எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே செக்போஸ்ட் போட்டு வாகனங்கள் மாவட்ட எல்லையை விட்டு செல்லாத மாதிரி போலீஸார் தடுப்புகளையும், செக் போஸ்ட்டையும் வைத்துள்ளனர். அது போல் இ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.



4 மாவட்டங்கள் இந்த நிலையில் நாளை முதல் இ பாஸ் இருந்தால் மட்டுமே இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து தொழிற்சாலைப் பணியாளர்கள் அலுவலகங்களுக்கு செல்வதற்கான இ பாஸ்களை பெறுவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றனர்.



அவதி அப்போது அந்த இணையதளம் செயல்படவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர். நாளை முதல் 12 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அமலாகும் இ பாஸ் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment