வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் வாகன நெரிசல் | சுங்கக் கட்டணம் ரத்து | Chengalpattu Paranur Toll Gate Free | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 18, 2020

செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் வாகன நெரிசல் | சுங்கக் கட்டணம் ரத்து | Chengalpattu Paranur Toll Gate Free | Vil Ambu News

சென்னையிலிருந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரனூர் சுங்கச் சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 35,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் முழு ஊரடங்கால் சென்னையிலிருந்து ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் வெளியேறி வருகிறார்கள். மேலும் சிலரோ சிறிய லாரி போன்ற வாகனங்களில் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறி வருகிறார்கள். நாளை முதல் அமலாகிறது என்பதால் இன்று சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக ஏராளமானோர் வெளியேறுகிறார்கள். இதனால் பரனூர் சுங்கச் சாவடியில் 2 கி.மூ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த வாகன நெரிசலால் சுங்கக் கட்டணங்களை வாங்க முடியாமல் டோல்கேட் ஊழியர்கள் திணறினர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் பரனூர் டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment