வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: பின்னர் சிறுவனுக்கு நேர்ந்தது என்ன..? | PUBG Loss | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, July 04, 2020

பப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: பின்னர் சிறுவனுக்கு நேர்ந்தது என்ன..? | PUBG Loss | Vil Ambu News

பப்ஜி விளையாட்டில் 17 வயது சிறுவன் பெற்றோரின் சேமிப்பான ரூ.16 லட்சத்தை செலவழித்தான்.



பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் சீன விளையாட்டு செயலியான பப்ஜி கேம்-ஐ விளையாடியே அடிமையாகிருந்தான். அதற்காக தனது அம்மாவின் ஸ்மார்ட் போனை பயன்படுத்திவந்தான். சிறுவன் அதிக நேரம் மொபைல்  போனை பயன்படுத்துவதைக் கண்டு பெற்றோர் கேட்கும்போது, ஆன்லைனில் படிப்பதாக அவன் பொய் கூறியுள்ளான்.


இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் அடுத்தடுத்த கட்டங்கள்  எட்டவும் புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளான். இப்படியே அடிமையாகிய சிறுவன் ரூ.16 லட்சம் ரூபாயினை செலவழித்துள்ளான்.


வங்கியில் பணம் எடுத்ததற்காக வந்த மெசேஜ்களை உடனடியாக அழித்துவிடுவானம் இந்த சிறுவன். இந்த பணம் இந்த சிறுவனின் எதிர்கால செலவுகள் மற்றும் குடும்பத்தின் அவசர செலவுகளுக்காக கஷ்டப்பட்டு சேர்த்த பணம் என பெற்றோர்கள் குமுறுகின்றனர். சிறுவனின் தந்தை ஓர் அரசு அலுவலர் ஆவார்.


இதனால் அதிர்ச்சியுற்ற சிறுவனின் தந்தை உடனடியாக போலீசீல் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை மீட்க முடியாது என போலீஸார் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து மனம் விரக்தியடைந்த சிறுவனின் தந்தை அந்த சிறுவனை ஓர் இருசக்கர வாகன பழுதுநீக்க கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

No comments:

Post a Comment