Run World Media: அது சரியான அப்பாவி பொண்ணு மச்சான், ஈசியா ஏமாத்திரலாம். நான் என்ன சொன்னாலும் கேப்பா’

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

அது சரியான அப்பாவி பொண்ணு மச்சான், ஈசியா ஏமாத்திரலாம். நான் என்ன சொன்னாலும் கேப்பா’


Pages


“பணம், உடல் என்று தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஏமாற்றும் நோக்கத்தோடு, பெண்களைத் தேடும் ஆண்கள் முதலில் குறிவைப்பது, கணவனை இழந்த, அல்லது வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ வேலை செய்யும் நன்கு சம்பாதிக்கும், வசதியான கணவரின் மனைவிகளைத்தான்” என்றார்கள்.


திருமணமான பெண்களைப் பொறுத்தவரை, தன் கணவனிடம் கிடைக்காத சிறு பாராட்டு வார்த்தைகளும், ஊக்குவிப்பும் இன்னொருவரிடமிருந்து கிடைக்கும்போது, எளிதில் நட்பு உருவாகிவிடுகிறது. நட்பென ஆரம்பிக்கும் உறவு, அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம். எல்லா ஏமாற்றங்களுக்கும் அடிப்படையே நம்பிக்கைதான்.


குடும்பப் பிரச்சினைகள் நிறைந்த, ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வரும் பெண்ணிடம், அவள் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வைத் தரும் யோசனைகளைக் கூறினால்கூட அவர்களுக்குப் பெரும் ஆறுதலை அது அளிக்கிறது. இந்த மனநிலையைத்தான் ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று சிலர் பகிர்ந்துகொண்டார்கள்.


ஆறுதல் வார்த்தைகள் கூறியும் ஏமாற்றுகிறார்கள், அல்லது அனுதாபத்தைத் தூண்டியும் ஏமாற்றுகிறார்கள். “என்னோட செத்துப்போன அம்மா மாதிரி இருக்க. என்ன விட்டுப் போன என் காதலி மாதிரி இருக்க” என்று கூறி ஆரம்பிக்கும் தூண்டில், “எனக்கு மட்டும் யாருமே இல்லை” என்றதும் பெரிய வலையாக விரிகிறது. மனம் இரங்கும் பெண்களில் சிலர் தங்களை அறியாமலேயே இந்த வலையில் விழுகிறார்கள்.


இன்னும் சில பெண்களுக்குத் தன்னம்பிக்கை இருக்காது. தாங்கள் அழகாக இல்லை, தன்னை யாரும் ரசிக்கவில்லை என்று, தன்னைத் தானே குறை கூறிக்கொண்டிருப்பார்கள். யாராவது தன்னை ரசிக்க மாட்டார்களா என்று உள்ளூர ஏக்கத்தில் இருக்கும் அவர்களிடம், அவர்கள் அழகை வர்ணித்துப் பேசி ஏமாற வைக்கிறார்கள் என்கிறார், கேள்வி கேட்கப்பட்ட மாணவிகளின் அருகிலிருந்த கல்லூரி மாணவர் ஒருவர்.


சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பேசுகையில், “ஒரு பொது இடத்தில் கூட்டமான ரயிலில் இரண்டு நண்பர்கள், ‘அது சரியான அப்பாவி பொண்ணு மச்சான், ஈசியா ஏமாத்திரலாம். நான் என்ன சொன்னாலும் கேப்பா’ என்று பேசுவதைக் கேட்டு அத்தனை கோபம் வந்தது. முதலில் பெண்கள் தாங்கள் இன்னொருவர் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும் என்ற பழைமைவாத எண்ணத்தை, தன்னைத் தானே குறைவாக மதிப்பிட்டுத் தாழ்த்திக்கொள்ளும் மனநிலையைக் கைவிட வேண்டும்.


ஒருவர் கொடுத்த நம்பிக்கையில் நாம் கண்ட கனவெல்லாம் ஒரு நாள் பொய் என்றோ அல்லது சாத்தியமற்றது என்றோ தெரிந்தால் எத்தனை நாட்கள்தான் அமைதியாய் இருக்க முடியும்? சில ஆண்கள் தங்களின் விருப்பம்போல் தட்டி விளையாடப் பெண்கள் ஒன்றும் பொம்மை இல்லை” என்று பொரிந்து தள்ளினார்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்