Run World Media: தப்பு பண்ணிடேன் என்று கெஞ்சிய மனைவி.. வாய்ப்பு கொடுத்த கணவனுக்கு மீண்டும் செய்த துரோகம்

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

தப்பு பண்ணிடேன் என்று கெஞ்சிய மனைவி.. வாய்ப்பு கொடுத்த கணவனுக்கு மீண்டும் செய்த துரோகம்

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். +2 வரை மட்டுமே படித்திருக்கும் இவர் தன்னுடைய கடுமையான உழைப்பால் சென்னையில் ஒரு ஹோட்டலும், சொந்த கிராமத்தில் பெற்றோருக்காக ஒரு ஹோட்டலும் நடத்திவருகிறார்.


ஹோட்டலில் நல்ல வருமானம் வந்தநிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் துறையூர் அருகே கீராம்பூரைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது.
இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மனைவி மீது அதிக பாசம் கொண்ட கனகராஜ் அவரை ராணி போன்று பார்த்து வந்துள்ளார். கனகராஜின் பெற்றோரும் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வந்துள்ளனர். இந்நிலையில் சரண்யா நான் பி.சி.ஏ. படிச்சிருக்கேன். மேல படிக்கணும் வேலைக்கு செல்ல ஆசையா இருக்கு என்று கெஞ்ச, உடனே மனைவி மீது இருந்த கட்டுக்கடங்காத பாசத்தில் கனகராஜ் அவரை துறையூருக்கு படிக்க அனுப்பிவைத்துள்ளார்.
இப்படி இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கனகராஜின் போனுக்கு தொடர்பு கொண்ட பெண், உன் மனைவி வீடு திரும்பியது போனை வாங்கிப் பார், அதன் பின் தெரியும் என்று கூறி வைத்துள்ளார்.
இதனால் மனைவி வந்த பின்பு, போனை வாங்கிப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், மனைவி யாரோ ஒருவனுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட எடுக்கக்கூடாத படங்களால் நிரம்பியிருந்தது. உடனடியாக மனைவி மீது ஆத்திரம் கொண்ட அவரை அடித்த போது, உடனே செளமியா நான் தப்புப் பண்ணிவிட்டேன், அவன் பேரு செல்வம்.

எங்க ஊர்க்காரன். சின்னவயதிலிருந்தே எங்களுக்குள்ள பழக்கம். அவனை திருமணம் செய்ய நினைத்தேன். அவன் வேற ஜாதி பையன் என்பதால் முடியாமல் போய்விட்டது. அவனுக்கு வேற பொண்ணோட திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கு.

அவனை தற்போது திடீர் என்று பார்த்தவுடன், பழைய பழக்கத்துல தப்புப் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள், இனிமே நான் இப்படி தப்புப் பண்ணமாட்டேன் என்று கூறி மனைவி அழ, கனகராஜ் இனிமேல் ஒழுங்கா இரு என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
அதன் பின் சில நாட்களில் இரவுச் சாப்பாட்டிற்கான குழம்பில் மயக்க மாத்திரையை கலந்து பரிமாறிய சரண்யா, கணவனும், மாமனார்-மாமியாரும் தூங்கிய பின்பு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி செல்வத்துடன் துறையூர் பகுதியில் தலைமறைவாகியுள்ளார்.
மனைவியையும், குழந்தையையும் நாலாபுறமும் தேடிப்பார்த்த கனகராஜ் இறுதியாக என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத் தாருங்கள் என்று காவல் நிலையத்தில் புகார் செய்ய, செல்வத்தின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் தான் கனகராஜிற்கு போன் செய்த செல்வம், நான் உன் மனைவி, குழந்தைகள் எல்லாரும் துறையூரில் இருக்கும், இங்கு வா உன்னுடன் அவள் வருகிறேன் என்று சொன்னால் நீ அழைத்துச் செல் என்று கூறி முடித்துள்ளார்.
உடனடியாக உறவினர்களுடன் கனகராஜ் அங்கு சென்ற போது, செல்வம் மற்றும் செளமியாவை தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் துறையூர் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவரை அங்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது கனகராஜ், என் மனைவி மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தேன், அவள் படிக்க வேண்டும் என்று சொன்னால் அதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்க வைத்தேன்.


ஆனால் கடைசியில் எனக்கு துரோகம் செய்துவிட்டாள் அவள் மற்றும் செல்வம் மீது நடவடிக்கை எடுங்கள் கூற, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இவர்கள் இருவர் மீதும் வழக்கு போட முடியாது. வயதுக்கு வந்த இரண்டுபேர் விருப்பப்பட்டு ஒன்றாக இருக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படி இருக்கு. நான் எதுவும் செய்ய முடியாது, சரண்யாவும், செல்வமும் என்ன சொல்கிறார்களோ, அதைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி, செல்வத்தையும், சரண்யாவையும் பார்த்த போது, சரண்யா எனக்கு கனகராஜ் மற்றும் அவர் மூலம் பெற்ற குழந்தைகள் வேண்டாம் செல்வமே போதும் என்று சொல்ல, பொலிசார் செல்வத்துடன் செளமியாவை அனுப்பி வைத்தனர்.


வெளியில் இருந்த செல்வத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் கண்கலங்கி நின்று கொண்டிருக்க, ஆனால் அவர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் காமம் கண்ணை மறைக்க செல்வம், செளமியாவுடன் சென்றுவிட்டார். அதன் பின் தன் தோழில் குழந்தைகளை சுமந்த படி கனகராஜும் சென்றுவிட்டார்.


இந்த சம்பவத்தை படித்த பார்த்து இணையவாசிகள் சிலர், நீதிமன்ற தீர்ப்புகளில் தனிமனித சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒருவகையில் சிறப்பானது என்றாலும் அதன் நல்ல நோக்கத்தை தங்களின் தீய நோக்கத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கின்ற சிலரால் நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம் விமர்சனத்திற்கு ஆளாகிறது என்று கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்