வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கனூர் அருகே கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

திருக்கனூர் அருகே கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயம்திருக்கனூர் அருகே கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கனூர் அருகே மணலிப்பட்டு காலனி கோரைக்கேணி பாதை பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகள் அனுசுயா (வயது21). இவர் பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்து முடித்து தற்போது புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.


லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த அனுசூயா கடந்த சில நாட்களுக்கு முன்பு வார விடுமுறையில் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.(தொடர்ச்சிகீழே...)

இதையும் படிக்கலாமே !!!

சம்பவத்தன்று காலை அனுசுயா தனது பெற்றோரிடம் விடுதி சென்று விட்டு பின்னர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அனுசுயா விடுதிக்கும் செல்லவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர் அனுசுயாவை உறவினர் வீடு மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அனுசுயா இல்லை.
இதையடுத்து வீரமுத்து தனது மகள் மாயமானது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment