வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சமூக வலைதளம் மூலம் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

சமூக வலைதளம் மூலம் 500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைதுஆந்திராவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காதல்வலை வீசி 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகள்கள், சினிமா பிரமுகர்கள் வீட்டு பெண்களும் இவரது மோசடியில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.


கர்னூல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார் மோசடி மன்னனாக வலம் வந்து 500 இளம் பெண்கள் வாழ்வில் விளையாடியிருப்பது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இயற்கையில் வழுக்கை தலையுடன் இருக்கும் ராஜ்குமார் விக் வைத்து,  கோர்ட் சூட் அணிந்து டிப் டாப்பாக தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.(தொடர்ச்சிகீழே...)

இதையும் படிக்கலாமே !!!

பல ஆண் விளம்பர மாடல்களின் புகைப்படத்தை பதிவேற்றியும் ராஜ்குமார் மோசடியை அரங்கேற்றியுள்ளார். இளம்பெண்கள் பலர் கற்பையும், நகை, பணத்தையும் இழந்த பின்னரே இவர் மோசடி மன்னன் என்பதை அறிந்து அலறியுள்ளனர். பணம் கொடுக்காததால் தம்முடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். 2016-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment