வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பள்ளியில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு மாணவன் செய்த செயலை பாருங்க
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 30, 2018

பள்ளியில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு மாணவன் செய்த செயலை பாருங்கபொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்.


ஆனால் இங்கு ஒரு மாணவன் மாதவிடாய் ஏற்பட்ட சக மாணவிக்காக செய்ததை பற்றி இதில் பார்க்கலாம். பள்ளிகூடத்தில் படிக்கும் ஒரு பெண்மணி பள்ளிபேருந்தில் வீட்டிற்கு செல்லும் போதே அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த பள்ளியில் படிக்கும் அந்த பெண்ணை விட வயது மூத்த மாணவன் ஒருவன் உடனே அந்த பெண்ணின் காதின் ஓரத்தில் சென்று உன்னுடைய உடையில் ரத்த கறை ஏற்பட்டு இருக்கிறது நான் என்னுடைய சுவட்டரை தருகிறேன் அதை உன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு பத்திரமாக வீட்டிற்கு செல் என கூறியுள்ளான்.
(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


ஆரம்பித்தில் அந்த மாணவி கொஞ்சம் சங்கடத்தோட இல்லை வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறாள். அதற்கு அந்த பையன் எனக்கு தங்கை இருக்கிறார்கள், எனக்கு புரிகிறது இது எல்லாம் பரவாயில்லை நீ சுவட்டரை எடுத்துக்கொண்டு போ என அந்த பொண்ணின் வீடு வரும் வரை பாதுகாப்பாக வந்துள்ளான்.மாணவனின் இந்த செயலுக்காக அந்த பொண்ணோட அம்மா அந்த மாணவனை பாராட்டி பேஸ்புக்கில் உள்ள ஒரு பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். அந்த அம்மாவிடும் கூறுவது போல் பதிவிட்டது இருந்தார்கள் அது என்னவென்றால் " நீங்கள் அந்த மாணவனின் அம்மா என்றால் உங்களுக்கு என்னுடைய நன்றி, நீங்கள் உங்க பையனை நல்லபடியாக வளர்த்திருக்கிறீர்கள்" அப்படி என்று பதிவிட்டு இருந்து இருக்கிறார்கள்.அதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் பசங்க மிகவும் மோசமானவர்கள் தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று பொதுவான கருத்து ஒன்று இருக்கிறது. ஆனால் நல்ல விஷயங்களையும் அவர்கள் செய்கிறார்கள் என்பதை உணர்த்தவே இதை நான் பதிவிடுகிறேன் என்று கூறி இருக்கிறார்கள் அந்த பொண்ணோட அம்மா.இவர்கள் கூறுவது சரிதான். ஒரு பெண்ணோட வலியை உணர்ந்தவன் உண்மையான ஆண்மகன். அந்த பையனோட அந்த செயலுக்காக பலரும் அந்த பையனை பாரட்டிகொண்டு வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment