வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வானத்தில் "மிதக்கும் நகரம்"
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

வானத்தில் "மிதக்கும் நகரம்"இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வாயால் சொன்னால் இந்த உலகம் நம்பாது - சாட்சி வேண்டும். சாட்சி இருந்தால் பொய் ஒன்றை கூட உண்மை ஆக்கி விடலாம் என்கிற போது, உண்மையை நிரூபிப்பது என்பதொன்றும் பெரிய கடினம் அல்ல.
                                               

அப்படியாக, சமீபத்தில் சீனாவில் உள்ள ஜியான்ங்க்ஷி மற்றும் போஷன் ஆகிய இரண்டு நகரங்களின் வான் பகுதியிலும் தோன்றிய 'மிதக்கும் நகரம்' சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..! (தொடர்ச்சி கீழே...)                              
இதையும் படிக்கலாமே !!!

மக்கள் சாட்சி :
மிதக்கும் நகரம்' வானத்தில் தோன்றிய அந்த காட்சியை கண்டதாக ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சி கூற, அந்த காட்சியானது கேமிராவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் : 
பதிவான அந்த காட்சியில் வானத்தில் மாபெரும் நகர அமைப்பு போன்ற ஒன்று பெரிய பெரிய கட்டிடங்களுடன் வானத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது.


யூட்யூப் :

இந்த காட்சி யூட்யூப்பில் பதிவேற்றம் செய்த பின்னர் உலகம் முழுக்க தீயாய் பரவியுள்ளது மிதக்கும் நகரம் வீடியோ..!

சதி கோட்ப்பாட்டாளர்கள் :
மேலும் உலகம் முழுவதிலும் உள்ள சதி கோட்ப்பாட்டாளர்கள் இந்த மிதக்கும் நகரம் குறித்த தங்களது விளக்கத்தினை அளித்த வண்ணம் உள்ளனர்.

நாசாவின் ரகசிய திட்டம் : 
இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்கிறார்கள் சில சதி கோட்ப்பாட்டாளர்கள்.

இல்லுஷன் காட்சி : 
 அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான் - ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.
 

ஏலியன்கள் : 
மேலும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள், இது உலகில் தோன்றியது அல்ல, வேறு ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று, என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment