வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (இன்று உலக உணவு தினம்) பட்டினி இல்லா உலகம் வேண்டும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

(இன்று உலக உணவு தினம்) பட்டினி இல்லா உலகம் வேண்டும்



உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நமது செயல்பாடு நமது எதிர்காலம் : 2030க்குள் பட்டினி இல்லாத உலகம் சாத்தியம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


உற்பத்தி குறைவு: 

மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பது அரிதாக உள்ளது.


தற்போதைய சூழலில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. இதனால் மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. எனவே உணவுப்பொருள் உற்பத்தியின் அளவும் குறைகிறது. கையில் பணம் இருந்தாலும், உணவுதான் பசியை போக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றைய தலைமுறை விவசாயம் மீது கவனம் செலுத்த வேண்டும்.



80 :

உலகில் 80 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம்.



30 :

ஊட்டச்சத்து குறைவால் ஆண்டு தோறும் 30 லட்சம் குழந்தைகள், ஐந்து வயதுக்குள் உயிர் இழக்கின்றனர்.



3ல் ஒன்று :

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. எனவே உணவை வீணாக்காதீர்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment