வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..! நீங்க எப்படி ?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

ஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..! நீங்க எப்படி ?ராக்கெட் வேகமெல்லாம் கொஞ்சம் தள்ளியே நிக்கலாம். அதை விட வேகமாக உயர்ந்து வருகிறது விலை உயர்வும், பணவீக்கமும். இவை அனைத்துமே இன்றைய காலக்கட்டத்தில் பணிக்குச் செல்வதை கட்டாயமாக்குகின்றன. ஒரு வழியாக, நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைத்து விட்டாலும் அந்த வேலைக்கான பணிச் சூழலும், அதிகப்படியான வேலைகளிலுமே உங்களுடைய அதிக நேரம் செலவாகி விடும். இதனால் நீங்கள் பணி செய்யும் இடம் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.

ஆபீசுல நா எப்பவும் ஜாலியாகத்தான் இருப்பேன்..!
 நீங்க எப்படி ? நீங்கள் வேலை செய்யும் இடம் உங்களுக்கு வசதியாகவும், உங்களது மனநிலையுடன் ஒன்றிப்போவதுமாக இருந்தால் மட்டுமே, உங்களால் நல்ல முறையில் வேலை செய்து சரியான இலக்கை அடைய முடியும். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

அலுவலகம்னா இப்படி இருக்கனும்! 
 நீங்கள், உங்களது அலுவலகத்திலேயே மன அழுத்தம் நிறைந்த சில பணியாளர்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவர்களுடன் நட்பு வைக்க பெம்பாலும் யாரும் விருப்புவதில்லை. நீங்கள் உங்கள் வேலையில் மகிழ்ச்சியுடன் திகழ, சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.


முதலாளியை எப்படி சமாளிப்பது ?
 செய்யும் தொழிலை மகிழ்ச்சியோடு செய்தாலே சிறந்தது என கூறுவது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் அதை செய்து காட்டுவது சிறிது கடினம். பொதுவாக நீங்கள் உங்களது முதலாளியை எப்படி சமாளிப்பது என்றும், உங்களது நண்பர்கள் போல நடிக்கும் உங்கள் சக தொழிலாளர்களை எப்படி சமாளிப்பது எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் உங்களுடைய சுமையையே அதிகரிக்கும்.


புறந்தள்ளி விடுங்கள் 
 இந்த எண்ணங்களில் நீங்கள் முழு கவனத்தையும் செலுத்தினால் உங்களுடைய வேலைகள் சரிவர அமையாததோடு, உங்களுக்கும் மன அழுத்தம் ஏற்பட்டு விடும். விரைவிலேயே இது உங்களிடம், வேறு புது வேலைக்கான முயற்சியை தோற்றுவித்து விடும். அடிக்கடி வேலை மாற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான தீர்வா? உங்கள் வேலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதற்கு தகுந்த நல்ல தீர்வை யோசிப்பதே சிறந்தது. வேலையை விட்டு விடுவது அல்ல.


யோசியுங்கள்!
 நீங்கள் உங்கள் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியோடு இருக்க நாங்கள் இங்கே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உங்கள் பணியிடங்களின் சூழலில் ஏதேனும், பிரச்சனை இருப்பின் இதை படித்து, பயனடையுங்கள்.
நல்ல நண்பர்கள்
 நீங்கள் வேலை செய்யும் இடங்களில், உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் ஒரு மன ஒன்றிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்வது கட்டாயம். இது நிச்சயமாக உங்களுக்கு உதவி புரியும். வீட்டிலேயே எப்போதும் சாப்பிடுவதற்கு பதிலாக, உங்கள் உடன் வேலை செய்பவர்களோடு வெளியேசென்று அவ்வப்போது சாப்பிடலாம். வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்து, அனைவருடனும் பகிர்ந்து உண்ணலாம். இது உங்களுக்கு, உங்களுடன் வேலை செய்பவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இது நீங்கள் பணி புரியும் இடத்தில், நல்ல சந்தோஷமான சூழலைத் ஏற்படுத்தும்.பெர்சனலாகவே வைத்துக்கொள்ளுங்கள்
 நீங்கள் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, முக்கியம் உங்களுடைய சொந்த விசயங்களை நீங்கள் பெர்சனலாகவே வைத்துக் கொள்வது தான். அவற்றை உங்கள் வேலையோடு குழப்பிக் கொள்ளாதீர்கள். அது எல்லா விதத்திலும் உங்களுடைய பணித்திறமையை பாதித்து விடும். எனவே நீங்கள் பணியிடங்களில், மகிழ்ச்சியோடு இருக்க உங்கள் சொந்த விஷயங்களை உங்கள் வீட்டிலேயே விட்டு விட்டு வர வேண்டும்.


பழக்க வழக்கங்கள்
 நீங்கள் உழைப்பை வெறுத்தால், பின் உங்களுடைய வேலையும் உங்களுக்கு வெறுத்து விடும். அப்படியே எல்லாமே வெறுத்து விடும். எனவே நீங்கள் நல்ல கொள்கையோடு இருந்தால் அது உங்களுடைய உயர்வை தீர்மானிக்கும். நீங்கள் வெறுப்பை உருவாக்கிக் கொண்டால், எல்லாமே வெறுத்து விடும். அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இது நீங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியாகும்.தனிமையை தவிர்த்து விடுங்கள்
 நீங்கள் பணி புரியும் இடங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தால், உங்களுடன் பணிபுரிபவர்களுடன், நட்புடன் பழகுங்கள். இந்த சிநேக மனப்பான்மை உங்களுக்கு, துன்பங்கள் வரும் போது, கை கொடுக்கும். ஆனால் நீங்கள் யாரிடமும் ஒட்டாமல், தனித்து இருந்தால் அது உங்களுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகளையே தோற்றுவிக்கும்.


நன்றி சொல்லுங்கள்
 உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் பெருமையாக நினைக்க வேண்டும். உங்களுக்கு வேலை இருக்கிறது. சில நேரங்களில், நீங்கள் டைப் செய்வது கடினமாக இருந்தால், உங்கள் கோபத்தை ஆபீஸ் தொலைபேசியிலோ, கதவை வேகமாக மூடுவதிலோ காட்டுவீர்கள். எத்தனையோ மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். உங்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதை நினைத்து நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். அதை நன்றியோடு நினைப்பதே, நீங்கள் உங்கள் பணியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியாகும்.நேர்மறையாக இருக்கவும்
 அனைவருமே பணியில் பிரச்சனைகளை சந்திப்பர். நேர்மறையாக செயல்பட வேண்டும். நம்பிக்கையோடு செயல்பட்டால், விரைவில் நல்லது நடக்கும். நம்பிக்கையை இழக்கக் கூடாது. அனைத்தும் அதனதன் நேரத்தில் நடக்கும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment