வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?



பருக்கள், கொப்புளங்கள் என்பவை சின்ன விஷயங்கள் என்றாலும் இவை சில இடங்களில் வரும்பொழுது, உண்மையிலேயே மிகவும் எரிச்சலடையச் செய்யும். அவ்வப்போது திடீரென வலியை உண்டாக்கி நம்மைக் கடுப்பேற்றிவிடும்.
                                     
                                
அதிலும் நம்முடைய பிட்டப்பகுதியில் (உட்காரும் இடம்) மற்றும் இடுப்பில் ஆடை அணியும் பகுதி மற்றும் இறுக்கமான இடங்களில் வரும் கொப்புளங்கள் உண்மையாகவே வலியையும் அசௌகரியத்தையும் கொடுக்கத்தான் செய்யும்.

கொப்புளங்கள்

 கொப்புளங்கள் உடல் சூட்டின் காரணமாகத் தான் பெரும்பாலும் உண்டாவதாக்க கூறப்படுகிறது. அவை தோன்றிய ஆரம்ப காலகட்டத்திலேயே அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது அப்படியே பெரிதாக, பக்கத்தில் மற்ற இடங்களிலும் கொப்புளங்கள் வர ஆரம்பித்துவிடும். சிலரோ கொப்புளங்கள் தானே தானாக அமுங்கிவிடும் என்று சொல்லி அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவோ பெரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்குக் கூட பெரிதாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.


காரணங்கள்

இந்த மாதிரியான சதைப்பகுதி நிறைந்த பகுதி நிறைந்த இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே பாக்டீரியா தான். இதிலும் குறிப்பாக ஸ்டேப் (எ) ஸ்டேப்பிலோஸல் என்னும் பாக்டீரியா தான் காரணம். இந்த பாக்டீரியா நம்முடைய உடலில் பரவ ஆரம்பித்ததும் அது சருமத் துளைகள் மற்றும் மயிர்கால்களுக்குள் புகுந்து பரவ ஆரம்பித்துவிடும். இதை நீங்கள் சாதாரண விஷயங்களாக நினைத்து விட்டவிடக்கூடாது. எச்ஐவி, நீரிழிவு போன்ற உங்களுடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை காலி செய்யும் நோய்கள் உள்ளவர்குளாக இருந்தால், இந்த பாக்டீரியா மிக வேகமாகப் பரவ ஆரம்பித்துவிடும்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


இதுபோன்ற பருக்களும் கொப்புளங்களும் வருவதற்கு முன்பாக, அந்த குறிப்பிட்ட பகுதியில் லேசாக சிவப்பு நிறத்தில் சருமம் மாறிவிடும். அந்த சருமப் பகுதி மட்டும் லேசாக கடுகடுவென வலி எடுக்கும். இவற்றை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இந்த இடத்தில் பெரிதாக கொப்புளங்கள் வரப்போகிறது என்று.


வீட்டு வைத்தியம் பயப்படாதீர்கள்

ஆரம்பத்திலேயே நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்தே அந்த இடத்தில் உள்ள கொப்புளங்களைச் சரிசெய்து விடலாம். அதற்கு பெரிதாக செலவும் செய்யத் தேவையில்லை. பெரும்பாலும் அத்தகைய பொருள்கள் யாவும் நம்முடைய வீட்டு அடுப்பங்கரையிலேயே கிடைக்கும்.

சூடான ஒத்தடம்

 பொதுவாக இது கொப்புளங்களை சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கென தனியே எந்த பொருளும் தேவையில்லை. கொப்புளங்கள் உண்டான பகுதிகளில் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்க வேண்டும். சிலர் உப்பை துணியில் கட்டி அதை வாணலியில் சூடேற்றி ஒத்தடம் கொடுப்பார்கள். சிலர் வெந்நீரில் ஒத்தடம் கொடுப்பார்கள். தொடர்ந்து ஓரிரு நாட்கள் கொடுத்தால் கொப்புளங்கள் அமுங்கி விடும்.

மஞ்சளும் தேனும்

 மஞ்சள் மற்றும் தேன் ஆகிய இரண்டுமே மிகவும் சக்திவாய்ந்த பொருள்கள். இது வெறும் சமையலுக்கு மட்டுமின்றி, நம்முடைய சருமு ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டுக்கும் பயன்படுகிறது. நம் எல்லோருக்குமே தெரியும் இது பூஞ்சைத் தொற்றிலிருந்து பாதுகாக்கும். பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கும். நோயெதிர்ப்பு ஆற்றலை ஆதிகரிக்கும் என்பது. 30 கிராம் அளவுக்கு மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை 100 மில்லி தண்ணீரில். நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் சுண்டியதும் மஞசள் அப்படியே அடியில் தேங்கியிருக்கும்படி குளிர வையுங்கள். பின் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி, கொப்புளங்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். அப்படியே விட்டு விடுங்கள். நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.


பூண்டு
                          
                  
பூண்டு மிகச்சிறந்த ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இதில் நிறைய ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்திருக்கின்றன. இது கொப்புளங்கள் தோன்றிய இடத்தில் ஏற்படும் வலிகளை வேகமாக குணப்படுத்தும். 5 முதல் 7 பற்கள் வரை பூண்டினை எடுத்து வெறும் 50 மில்லி தண்ணீரில் நன்கு அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்தால், எரிச்சல் குறைவாக இருக்கும். கொப்புளங்களும் விரைவில் ஆறிவிடும்.


கற்றாழை ஜெல்

 கற்றாழை ஜெல் பல்வேறு சருமப் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும். அது உட்காரும்இடத்தில் வரும் கொப்புளங்கள் போன்றவற்றையும் சேர்த்து தான். இந்த ஜெல் சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படுகிறது. சருமத்தை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் வலியைக் குறைக்கும். கடைகளில் வாங்குவதை விட ஒரிஜினல் கற்றாழை மடல்களை எடுத்து அதிலுள்ள ஜெல்லை ஃபிரஷ்ஷாக எடுத்து சில தினங்கள் அப்ளை செய்து வந்தால் போதும். கொப்புளங்கள் குணமாகிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

 ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் ஸ்டிராங்கான ஒரு ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்பு கொண்டது. கொப்புளங்கள் மீது நீங்கள் இதை அப்ளை செய்யும்போது, அதனால் உண்டாகும் தொற்றுக்கள் குறையும். நேரடியாக எப்போதுமே சருமத்தில் ஆப்பிள் சீடர் வினிகரை அப்ளை செய்யக் கூடாது. சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாக, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இது சருமத்தில் அரிப்பை உண்டாக்கும்.
பால் தொற்றுக்களில் இருந்து வேகமாக குணமடைய பால் ஒரு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பாலை கொப்புளங்கள் உள்ள இடங்களில் காட்டனில் நனைத்து வைக்கலாம். அது அந்த பகுதியைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். சருமங்களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை கொல்லும் ஆற்றல் கொண்டது. பாலை எப்படி அப்ளை செய்ய முடியும். ஒழுகிவிடும். அதனால் 100 மில்லி பாலை எடுத்து காய்ச்சும்போது அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேருங்கள்.பின் அதே அளவு அரிசிமாவோ ஏதாவது மாவை சேர்த்தால் திக்காகிவிடும். பிறகு அதை அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.


வெங்காயம்
                                          

 வெங்காயத்தில் இயற்கையாகவே நிறைய ஆன்டி செப்டிக் பண்புகள் இருக்கின்றன. இது சருமத்தில் தொற்றுக்கள் பரவாமல் அதிவேகமாக செயல்பட்டு புண்களை ஆற்றும் சக்தி கொண்டது. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி சாறு இறங்கும் அளவுக்கு இடித்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சுத்தமான துணியில் கட்டி, கொப்புளங்களுக்கு மேல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். அதற்கு முன் அந்த பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

டீ ட்ரீ ஆயில் பாக்டீரியா?

ஃப்ங்கஸ் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த நிவாரணி தான் இந்த டீ ட்ரீ ஆயில். இதை கொப்புளங்கள் உள்ள உங்கள் பிட்டப்பகுதியில் அப்ளை செய்தால், தொற்றுக்கள் பரவாமல் இருக்கும். இரண்டு முறைகளில் இந்த ஆயிலை நீங்கள் அப்ளை செய்யலாம். நேரடியாக ஆயிலை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் காட்டன் பஞ்சில் வைத்து அப்ளை செய்து, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்யலாம். இன்னொரு முறை என்னவென்றா்ல,இந்த ஆயிலை லேசாக சூடுபடுத்தி வெதுவெதுப்பாக இருக்கும்போது சருமுத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யலாம்.

உருளைக்கிழங்கு

 உருளைக்கிழங்கை நாம் எப்போதும் குறைத்தே மதிப்பிடுகிறோம். ஆனால் இதில் மிகச்சிநற்த மினரல்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. அதோடு மக்னீசியம், கால்சியம், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சிறிய வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி, அதை அப்படியே பிட்டத்தில் உள்ள கொப்புளங்களின் மேல் வைத்தால் போதும். இதை சில தினங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். அப்படியே அமுங்கிவிடும்.
/*Sex*/

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment