வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன்.. சூப்பர்.. இப்படி ஒரு வழி இருக்கா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன்.. சூப்பர்.. இப்படி ஒரு வழி இருக்கா?மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்குவதற்கான சரியான நேரம் தீபாவளி. இந்தச் சமயத்தில் உங்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டினை தொடங்கி மாதம் லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பென்ஷன் திட்டங்களில் முன்கூடியே முதலீட்டினை தொடங்கும் போது அதிக லாபத்தினைப் பெற முடியும்.


ராஜாவின் பென்ஷன் திட்டமிடல்

ராஜாவின் வயது தற்போது 25, தன்னுடைய ஓய்வூதியத்திற்காக திட்டமிடும் இவர் என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார். இந்த முதலீடு இவரது வயது 60 ஆகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷனை அளிக்கும். அது மட்டும் இல்லாமல் 22 லட்சம் ரூபாய் பணத்தினையும் மொத்த தொகையாகவும் பெற முடியும். 8,10,000 ரூபாய் வருமான வரி விலக்கும் கிடைக்கும். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

என்பிஎஸ்

என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. வரும் காலத்தில் மேலும் அது உயர வாய்ப்புகள் உள்ளது.


30 வயதானவர்கள்

தற்போது முதலீட்டாளரின் வயது 30 என்றால் 60 வயதாகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் மாதம் 7,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவே தான் எவ்வளவு விரைவாக ஓய்வூதியத்திற்குத் திட்டமிடுகிறோமோ அவ்வளவு நல்லது எனக் கூறுகின்றேன்.


மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி?

உங்கள் வயது 25 என்றால் மாதம் 9,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால் 60 வயதாகும் போது மாதம் 1 லட்சம் ரூபாயினைப் பென்ஷனாகப் பெற முடியும். 35 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்யும் போது 11,34,000 ரூபாய் வரி சேமிப்பும் கிடைத்திருக்கும்.
இதுவே உங்கள் வயது 30 என்றால் மாதம் 12,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் போது மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் 60 வயதில் ஓய்வு பெறும் போது 37,10,762 ரூபாயினை மொத்த தொகையாகவும் பெற முடியும்.
 

பிஎப்ஆர்டிஏ

என்பிஎஸ் என்ப்படும் இந்தத் தேசிய ஓய்வூதிய திட்டமானது மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியப் பென்ஷன் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தினை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒழுங்குமுறை படுத்துகிறது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment