வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுரை சம்பவம்: வாலிபருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள புது செல்போன் கொடுத்த சிவகுமார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

மதுரை சம்பவம்: வாலிபருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள புது செல்போன் கொடுத்த சிவகுமார்நடிகர் சிவகுமார் மதுரையை சேர்ந்த வாலிபருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகன் ராகுலின் செல்போனை தட்டிவிட்டார் சிவகுமார். தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

செல்போன் 
 சிவகுமாரின் செயலை பார்த்த மக்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவர் வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவித்தால் போதுமா அந்த செல்போனை வாங்க அவர் ஒரு மாத சம்பளத்தை செலவு செய்திருப்பார். உடைந்த செல்போனுக்கு பதிலாக புதிய செல்போன் வாங்கித் தருவாரா சிவகுமார் என்று நெட்டிசன்கள் கேட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சிவகுமார் 
 வருத்தம் தெரிவித்ததோடு நிற்காமல் அந்த வாலிபருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார் சிவகுமார். அந்த வாலிபர் புதிய செல்போனை பெறும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.பாராட்டு 
சிவகுமார் செல்போனை தட்டிவிட்டதை பார்த்து கோபம் அடைந்து அவரை திட்டி, கலாய்த்து மீம்ஸ் போட்டவர்கள் தற்போது அவர் செய்துள்ள காரியத்தால் பாராட்டியுள்ளனர்.


புது போன்
 செல்போனை தட்டிவிட்டால் சிவகுமார் புது போன் வாங்கித் தருவார் என்பது தெரிந்தால் என் போனை அவர் முன்பு நீட்டி உடைத்திருக்கலாமே என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். ஆசை தான்...

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment