வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட கர்ப்பிணி- மயங்கிய நிலையில் அனுமதி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 28, 2019

இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட கர்ப்பிணி- மயங்கிய நிலையில் அனுமதி

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்ப்பிணியான சாந்தி தேவி(30). இவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.



ஆம்புலன்ஸ் சேவைக்கு லைன் கிடைக்கவில்லை. அதற்குள் சாந்தி, மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனைக்கு செல்ல 10 கிமீ பயணம் செய்ய வேண்டும். சாந்தியின் உடல்நிலை கருதி, அவரது கணவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் சாந்தியை ஏற்றினார்.

10கிமீ வாகனத்திலேயே சென்று சிஎச்சி எனும் மருத்துவமனையை அடைந்தனர். ஆனால், அங்கு சாந்தியை 27 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதனையடுத்து சிஎம்சி நிர்வாகம் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சாந்தி தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சாந்தி தேவியின் கணவர் கமல் கூறுகையில், ‘நாங்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற துடித்தோம். ஆனால், முடியவில்லை.

108 எண்ணுக்கும் முயற்சித்தோம். எவ்வித பலனும் இல்லை. எனவேதான் வேறு வழி இன்றி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றோம்’ என கூறினார்.

சாந்தி தேவி வசிக்கும் கிராமத்தினை அந்த தொகுதி  எம்பி மாதிரி கிராமமாக தத்தெடுத்தார். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment