வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உலகையே கிடுகிடுக்க வைத்த சிறுவன்: வைரஸ் ஏவி ஸ்மார்ட் டிவி, மோடம் பாதிப்பு,!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 29, 2019

உலகையே கிடுகிடுக்க வைத்த சிறுவன்: வைரஸ் ஏவி ஸ்மார்ட் டிவி, மோடம் பாதிப்பு,!

14 வயதான சிறுவன் ஒருவன் தற்போது ஒரு வைரஸ்வை
உருவாக்கியுள்ளான். இதன் தற்போது இந்த உருவாக்கியுள்ள வைரஸ்சை ஏவியுள்ளதால், தற்போது உலகம் முழுக்கவும் பரவியுள்ளது.

இதனால் உலகம் முழுக்க உள்ள ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மோடம்கள் கடும்பாதிப்பில் சிக்கியுள்ளன. இணையம் மூலம் செயல்படும் பொருட்களில் வேகமாக பரவி தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றது.


கணினி வைரஸ் என்றால்: 
 கணினி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணினி செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணினியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணினி ப்ரோக்ராம் ஆகும்.


























இவற்றிக்கு இருக்கும் ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணினிகளுக்கு பரவிச்செல்ல முடியும்.



ஸ்மார்டிவி, மோடம்களுக்கு பரவும்: 
 ப்ரோக்ராம்கள், கோப்புகளில் தன்னையும் இணைத்துக்கொள்ளும், இப்படி வைரஸ் இணைந்துகொண்ட ப்ரோக்ராம்கள், கோப்புக்களை இன்னுமொரு கணனிக்கு எடுத்துச் செல்லும்போது அந்தக் கணணியிலும் உள்ள கோப்புக்களில் மீண்டும் மீண்டும் பதிந்துகொள்ளும்.


இவை கணனிக்கு வந்தபின், அதில் இருக்கும் கோப்புகளை அழிப்பது, செயல்முறைமையின் சில பகுதிகளை செயல்படாமல் தடுப்பது. ஹர்ட்டிஸ்க்களை செயலிழக்க, கணணிகளை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது என்று பல தலையிடிகளை உருவாகலாம். தற்போது, ஸ்மார்டிவி, மோடம் உள்ளிட்டவைகளுக்கும் பரவும்.
இணையம் மூலம் செயல்படும் வைரஸ்:
இந்த வைரஸ், இணையம் மூலம் செயல்படும் பொருட்களின் ஸ்டோரேஜ் மற்றும் அதன் நெட்வோர்க் கட்டமைப்பை முற்றிலுமாக அழித்து அதனை செயல் இழக்க செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை 14 வயதாகும் சிறுவன் உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைட் லீபன் என்னும் சிறுவன்: 
 லைட் லீஃபன் (Light Leafon) என்று அறிப்படும் அந்த சிறுவன், பிரிக்கர்போட்டை மையமாக வைத்து தான் சிலெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை இன்னும் பலம் வாய்ந்ததாக மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிப்பு:  
2017ஆம் ஆண்டு பிரிக்கர்போட் (BrickerBot) என்ற வைரசால், கிட்டத்தட்ட 60 ஆயிரம் பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பிரிக்கர்போட்டை போன்றே சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸ், சர்வதேச அளவில் இணையம் மூலம் செயல்படும் பொருட்களில் வேகமாக பரவி வருகிறது.


சிலெக்ஸ் வைரஸ்: 
இந்த தாக்குதல் வேகமாக பரவி வருவதால், நமது வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி மற்றும் மோடம்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பொது மக்களும் சிந்திக்க துவங்கியுள்ளனர். மேலும், இந்தியாவுக்குள் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



No comments:

Post a Comment