வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, July 22, 2019

செல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போனில் பேசியபடியே இருசக்கரவாகனத்தில் சென்ற நபர் செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.

 ஓசூர் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார்.


கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்ற போது அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்துக்கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார். 

அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் ஆறுமுகம் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி வழங்கி, பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகம் பேசிக் கொண்டு சென்றது விவோ ஸ்மார்ட்போன் என தெரியவந்துள்ளது. சார்ஜ் குறைவாக இருக்கும் போதும், செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் போதும் கால் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.


No comments:

Post a Comment