வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வாட்டர் பார்க்கில் இயந்திரம் உருவாக்கிய 10 அடி உயரமுள்ள சுனாமி அலை; 44 பேர் காயம்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 01, 2019

வாட்டர் பார்க்கில் இயந்திரம் உருவாக்கிய 10 அடி உயரமுள்ள சுனாமி அலை; 44 பேர் காயம்

சீனாவில் வாட்டர்பார்க் ஒன்றில் இருக்கும் அலைகள் உருவாக்கும் இயந்திரம் பழுதாகி சுனாமி போன்ற பேரலையை உருவாக்கியதில் 44 பேர் காயம் அடைந்தனர். வடக்கு சீனாவில் ஷுய்யுன் வாட்டர் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் ஒரு நீச்சல் குளத்தில் இயந்திரம் ஒன்றின் மூலம் செயற்கையான அலைகள் உருவாக்கப்படுகிறது.
 சமீபத்தில் அந்த நீச்சல் குளத்தில் தங்கள் குழந்தைகளுடன் பலர் விளையாடிக்கொண்டு இருந்த போது, திடீரென சுனாமி
போன்ற  10 அடி உயரமுள்ள பேரலை ஒன்று அங்கு உருவாகி உள்ளது.


இதில் அங்கு இருந்தவர்கள் பலர் நீச்சல் குளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் 44 பேர் காயம் அடைந்த நிலையில், இதன் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
 செயற்கையாக அலைகள் உருவாக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு நடந்ததாகவும் அதனை இயக்கிய நபர் மீது தவறில்லை என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் அந்த பூங்கா மூடப்பட்டு இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment