வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, September 16, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிரான போரட்டம் அடுத்தகட்டத்தினை எட்டியுள்ளது.




பல ஆண்டுகளாக கல்குவாரியினை எதிர்த்து போராட்டம் மற்றும் கிராமசபை கூட்ட புறக்கணிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த பொதுமக்கள் தற்போது தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளையும் வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் அரசாங்கத்திடமே ஒப்படைக்க உள்ளதாக இன்று 16.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

ஏற்கனவே பலமுறை பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளிடமும், கனிமவள உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மேற்படி குவாரிக்கு எதிரான புகார் மனுவினை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த புகார் சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாகவே வழக்கும் தொடரப்பட்டு விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவானது பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களிடம் நேரடியாக இன்று கொடுக்கப்பட்ட மனுவாகும்.

No comments:

Post a Comment