வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: EMIS | ரூ.2000 வழங்கப்படும் | மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தது தமிழக அரசு | 2000 Scholorship for 12th Students | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 22, 2020

EMIS | ரூ.2000 வழங்கப்படும் | மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தது தமிழக அரசு | 2000 Scholorship for 12th Students | Vil Ambu News


கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னரே, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் 24-ம் நாள் நடந்த கடைசி தேர்வில் கொரோனா அச்சிறுத்தலால், 32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால் அதனை மீண்டும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றுவரும் நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2019-20 ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000/- வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மாணவர்கள் அவர்களது வங்கிக் கணக்குகளை அவரவர் படித்த பள்ளிகள் மூலமாக உடனடியாக  எமிஸ் (EMIS) வளைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment