வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வீட்டுவசதி மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைக்க கோரி துறைசார்ந்த செயலாளர்களை சந்தித்து மனு அளித்த மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Pugazhenthi DMK | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 11, 2020

வீட்டுவசதி மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைக்க கோரி துறைசார்ந்த செயலாளர்களை சந்தித்து மனு அளித்த மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Pugazhenthi DMK | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப-விடம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி நேரில் சந்தித்து மனு அளித்தார்.


மேலும், மதுராந்தகம் தொகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை செயலாளர் பணிந்தர் ரெட்டி இ.ஆ.ப-யை சந்தித்து மனு அளித்தார்.அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தண்டலம் பணங்கல் ஓடை, தண்டரைப் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட வேடந்தாங்கல் தண்டலம் நெல்வாய் ஓடை, வெளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் சமத்துவபுரம் – கொங்கரை மாம்பட்டு சாலை தரைப்பாலம் உள்ளிட்டவற்றை மேம்பாலமாக மாற்றக் கோரியும், மதுராந்தகம் ஒன்றியம், நெட்றம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கொல்லம்பாக்கம் காலனி மேம்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதை சீர் செய்யக் கோருதல் குறித்தும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


 

No comments:

Post a Comment