வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செண்டிவாக்கத்தில் திரளாக திரண்ட பொதுமக்கள்…! குழந்தைக்கு பெயர் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்..! பங்காரு அடிகாளரிடம் ஆசி பெற்ற தி.மு.க. இளைஞரணி செயலாளர் | Udhayanithi Stalin Talking at Sendivakkam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, February 05, 2021

செண்டிவாக்கத்தில் திரளாக திரண்ட பொதுமக்கள்…! குழந்தைக்கு பெயர் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்..! பங்காரு அடிகாளரிடம் ஆசி பெற்ற தி.மு.க. இளைஞரணி செயலாளர் | Udhayanithi Stalin Talking at Sendivakkam

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், காஞ்சி தெற்கு மாவட்டம், அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக ஒருங்கிணைந்து வரவேற்பு அளித்து எழுச்சிமிகு கோஷமிட்டனர்.


காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்ப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


பின்னர், பொதுமக்களிடம் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களின் இந்த எழுச்சியானது ஆளும் அ.தி.மு.க ஆட்சியை அடியோடு விரட்ட மக்கள் தயாராகிவிட்டதை உணர்த்துகிறது எனவும், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கான உங்களுக்கானது மட்டுமே என உறுதியளித்தார். மேலும், பிறந்த குழந்தைக்கு “உதயசூரியன்” என பெயர் சூட்டினார்.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை வணங்கி, பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று பின்னர் அச்சிறுபாக்கம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தினை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கோ.ப.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


 

No comments:

Post a Comment