வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நான் அட்வகேட்.! கழட்டிடுவன் உன் யுனிபார்ம...! | Chennai Lady Advocate Fight with Police | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, June 06, 2021

நான் அட்வகேட்.! கழட்டிடுவன் உன் யுனிபார்ம...! | Chennai Lady Advocate Fight with Police | Vil Ambu News

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சென்று நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி காரில் வந்த இரண்டு பெண்களை போலீஸார் விசாரித்துள்ளனர். அதில் ஒருவர் காவல்துறையினருக்கு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காவலர்களை ஒருமையில் பேசத்தொடங்கினார்.
இதனை அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் படம் பிடித்தனர். 'என்ன பார்த்து ஏய்-ன்னு சொல்றியா.. இப்ப காட்டடா... மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன் ஜாக்கிரதை.. என் கார் ஏன் நிறுத்திற.. ஏய் எல்லா காரையும் நிப்பாட்டுன்னு..' சாலையில் தொடர்ந்து ஒருமையில் போலீஸாரை வசை பாடினார்.
போலீஸார் அவரை மாஸ்க் அணிய சொல்லும் போது.. மேலும் ஆத்திரத்தில் சத்தம் போட தொடங்கினார். காவல்துறையினரை பணி செய்யவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment