வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சிபுரத்தில் இராஜகுபேரருக்கு நடைபெற்ற 108 மகா கலச அபிஷேகம் | 108 Maha Kalasa Abishegam for Kancheepuram Raja Guberar | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 03, 2021

காஞ்சிபுரத்தில் இராஜகுபேரருக்கு நடைபெற்ற 108 மகா கலச அபிஷேகம் | 108 Maha Kalasa Abishegam for Kancheepuram Raja Guberar | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காஞ்சிபுரம் வெள்ள கேட் குபேரபட்டினம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓம் ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடத்தில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் குபேரருக்கு விசேஷ அரியவகை மூலிகைகளை கொண்டு  கலசாபிஷேகம் நடைபெற்றது.

காலை விஷேச பூஜையுடன் பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து பூ அலங்காரத்துடன் கூடிய தங்கக் கவசம் செலுத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

குபேரரை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் அரக்கோணம் திருப்பதி போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக நவதானியகள் கொண்டு வந்து வழிபட்டனர்.

சிங்கப்பூர் மலேசியா போன்ற ஊர்களில் உள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

குபேரரை தரிசனம் செய்வதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் கொல்லிமலையிலிருந்து எடுக்கப்பட்ட விசேஷ பூஜை பொருள்களும் கோயிலின் சார்பில் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தில் சித்தர்  ராஜ குபேரர் செய்திருந்தார்.

No comments:

Post a Comment