வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 20 வயது தலீத் பெண் 5 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம்.! கால்வாயில் வீசி எறியப்பட்ட உடல்.!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 29, 2021

20 வயது தலீத் பெண் 5 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம்.! கால்வாயில் வீசி எறியப்பட்ட உடல்.!!

பீகாரில் 20 வயது தலீத் இளம்பெண்ணை 5 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த பிறகு, கொலை செய்யப்பட்டு கால்வாயில் உடல் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம் வைஷாலி பகுதியில் வசித்து வந்த தலீத் சமூதாயத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது, அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், அந்த இளம்பெண்ணை காப்பாற்ற முற்பட்ட போது, இந்த விஷயத்தில் தலையிட்டால் சுட்டுக் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு, அந்தப் பெண்ணை அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், அந்தப் பெண்ணின் தாயும் பஞ்சாயத்தை அணுகி, மகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களின் கிராமத்திற்கு அருகே உள்ள கால்வாயில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணை, ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டதாகவும், பின்னர், உடலை கால்வாயில் தூக்கி எரிந்து விட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி டுவிட்டரில் JusticeForVaishaliGirl என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட்டாக்கப்பட்டு வருகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment