வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விடுமுறை] பள்ளிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 23, 2021

[விடுமுறை] பள்ளிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ்.!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கின.


தொடக்க பள்ளிக்க நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி செல்ல ஆரம்பித்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செலங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவானது.

இதற்கிடையே, பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்தது. அதற்கு மாறாக டிசம்பர் மாத இறுதியில் திருப்புதல் தேர்வு நடக்குமென அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்தனர்.

இந்த சூழலில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதிவரை அரையாண்டு தேர்வு விடுமுறை விட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ' பள்ளி மாணவர்களுக்கு நாளை மறுநாள் (டிசம்பொஅர் 25) முதல் ஜனவரி இரண்டம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது' என தெரிவித்தார்

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

பள்ளி கல்வித்துறை செய்திகள் 


முந்தைய பள்ளி கல்வித்துறை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment