வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 30 ஆண்டுகளாக மூடப்பட்ட தேவாலயம் மீண்டும் திறப்பு.. கிருஸ்துமஸில் சிறப்பு பிரார்த்தனை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 24, 2021

30 ஆண்டுகளாக மூடப்பட்ட தேவாலயம் மீண்டும் திறப்பு.. கிருஸ்துமஸில் சிறப்பு பிரார்த்தனை!

காஷ்மீரில் 1989 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன. அந்த சமயத்தில் குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்து, கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். அவர்களின் மத வழிபாட்டுத்தளங்களும் கைவிப்பட்டன.


அந்த வகையில் ஸ்ரீநகர், டல்கேட் பகுதியில் உள்ள 1896 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளத்தையும் கிறிஸ்தவர்கள் கைவிட்டு சென்றனர். இதனால், அந்த வழிபாட்டுத்தளம் மிகுந்த சேதமடைந்தது. கடந்த சில மாதங்களாக அந்த வழிபாட்டுத்தளத்தை புனரமைக்கும் பணிகளை ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச அரசு மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஸ்ரீநகர் டல்கேட்டில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளம் நேற்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. 1989-ல் மூடப்பட்ட இந்த மத வழிபாட்டுத்தளம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று பிரார்த்தனைகள் நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட இந்த வழிபாட்டுத்தளத்தை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செயின் லூகா தேவாலயம் என்ற இந்த மத வழிபாட்டுத்தளத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மத மக்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வழிபாட்டுத்தளத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவ மதத்தினர் வரவேற்றுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment