வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூடுவாஞ்சேரி அருகே சாலையில் இறந்து கிடந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி | College Girl Died in Bike Accident at Guduvancherry | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 01, 2021

கூடுவாஞ்சேரி அருகே சாலையில் இறந்து கிடந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி | College Girl Died in Bike Accident at Guduvancherry | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி கபாலி நகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 18). இவர் கல்வாய் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். 

இதே கல்லூரியில் நந்திவரம் பகுதியை சேர்ந்த இவரது தோழியான வசுந்தரா (19), என்பவர் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று காலை கூடுவாஞ்சேரியில் இருந்து கல்வாயில் உள்ள கல்லூரிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

பாண்டூர் அருகே செல்லும் போது திடீரென சாலையில் நடுவே இறந்து கிடந்த மாட்டின் மீது மொபட் மோதியது. இதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த விஜயலட்சுமி பலத்த காயம் அடைந்தார். அவரது தோழி வசுந்தரா லேசான காயமடைந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment