வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காவல் நிலைய வாசலில் இரண்டு மணிநேரம் நடனமாடிய பெண்..!! | Lady Dacing in front of Police Station 2 hours at Salem Jalagandapuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 04, 2021

காவல் நிலைய வாசலில் இரண்டு மணிநேரம் நடனமாடிய பெண்..!! | Lady Dacing in front of Police Station 2 hours at Salem Jalagandapuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தின் பிரதான சாலையில் எடப்பாடி காவல்நிலையம் அமைந்துள்ளது.

அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகாரளிக்க வந்துள்ளார்.

ஆனால் அதே இடத்தில் புகாரளிக்க வந்த மற்றவர்களிடம் புகார்கள் பெறப்பட்டன. போலீசார் விசாரித்தனர். குறிப்பிட்ட இந்த பெண்ணிடம் மட்டும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பெண் பொறுமை இழந்தார்.

அதன் தொடர்ச்சியாக காவல் நிலையம் வாசல் முன்பு யாரும் எதிர்பாராத விதத்தில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். இதை பார்த்து அருகிலிருந்தவர்கள் பெண்ணை எச்சரித்தனர். ஆனால் அவர்களை அவர் திட்டி அனுப்பிவிட்டார்.

ஆனால் போலீசார் அப்பெண்ணை கண்டுகொள்ளவில்லை. சுமார் 2 மணிநேரம் ஆடிவிட்டு களைப்படைந்தவுடன் அவர் சென்றுவிட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் பேசினர்.

கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பெண் அடிக்கடி பிரச்சனை என்று காவல் நிலையத்தை அணுகுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அதனால் அவரை போலீசார் யாரும் கண்டுகொள்ளாவில்லை என்று கூறினார். மேலும் அவர் பொய் புகார் கூறி வந்ததாகவும் போலீசாரிடையே தகவல் தெரிவித்தனர்.

Recent Posts Widget

No comments:

Post a Comment