வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது | TN Women Self Help Group Loan Disposal | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 04, 2021

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது | TN Women Self Help Group Loan Disposal | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


கூட்டுறவு சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டில் முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts Widget

No comments:

Post a Comment