வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஈ.பி.எஸ் அடிக்கல் - எம்.கே.எஸ் ஓப்பன்...! - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஸ்மார்ட் ஆன மதுரை பெரியார் பேருந்து நிலையம் | Madurai Smart City Bus Stand Open | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 09, 2021

ஈ.பி.எஸ் அடிக்கல் - எம்.கே.எஸ் ஓப்பன்...! - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஸ்மார்ட் ஆன மதுரை பெரியார் பேருந்து நிலையம் | Madurai Smart City Bus Stand Open | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மதுரையில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.


அதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பில் மறு சீரமைக்கும் பணியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.


இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார், மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம் மட்டும் 55 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இங்கே இரண்டு தரைதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக முதல் தரைதளத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் சுமார் 371 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாகம் இரண்டாவது தளத்தில் சுமார் 4 ஆயிரத்து 861 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாகவும்,மேலும் பயணிகளின் வசதிக்கு ஏற்ற வகையில் தாய்மார்கள் பாலுட்டும் அறை காவல் கட்டுப்பாட்டு அறை காத்திருப்பு அறை அமைக்கபட்டுள்ளது.

இது தவிர தமிழர்களின் பாரம்பரிய நினைவு கூறும் வகையில் பேருந்து நிலையம் முழுவதும் கண் கவரும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் மதுரையின் பழமை போற்றும் வகையில் 100 ஆண்டுகள் பழமையான புகைப்பட தொகுப்பு, முன்னாள் முதல்வர் காமராஜர் அண்ணா பெரியார் உள்ளிட்ட தலைவர் சந்திப்பு படங்கள் மற்றும் மாநகராட்சி மூலம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் அருகே நான்கு தளங்களை கொண்ட வணிக வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று பயன்பாட்டுக்கு திறப்பதை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு தனியார் வாகனங்கள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment