வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேளச்சேரியில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து ஆந்திர கொள்ளையன் செய்த சங்கிலி பறிப்பு | Velachery Chain Robbery | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 08, 2021

வேளச்சேரியில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து ஆந்திர கொள்ளையன் செய்த சங்கிலி பறிப்பு | Velachery Chain Robbery | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னலோரம் காற்றுக்காக படுத்திருந்த பெண்களின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக வேளச்சேரி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், அடிக்கடி வீட்டின் ஜன்னல் ஓரம் படுத்திருக்கும் பெண்களிடம் சங்கிலி பறித்து தப்பிச்சென்ற கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த திருலோகசந்தர் (வயது 56) என்பவரை பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பகலில் வந்து நள்ளிரவில் ஜன்னல் ஓரம் தூங்குவோரை நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஆந்திராவில் உள்ள அடகு கடையில் விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இவர் மீது ஆதம்பாக்கம், பள்ளிகரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திருட்டு நகைகளை வாங்கியதாக நகரியில் உள்ள அடகு கடை உரிமையாளர் உகமாராம் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் 15 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment