வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ராஜேந்திர பாலாஜி தலைமறைவு..! கேவலமா இல்லையா.? புடிச்சி போலீஸிடம் ஒப்படைங்க..! அதிமுகவை டாராக கிழித்த முரசொலி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 31, 2021

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு..! கேவலமா இல்லையா.? புடிச்சி போலீஸிடம் ஒப்படைங்க..! அதிமுகவை டாராக கிழித்த முரசொலி.!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டு அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி என்பவர் சில வாரங்களாக தலைமறைவாக இருக்கிறார். இதைவிடக் கேவலம் எதுவும் இருக்க முடியாது.


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது அதிமுகவுக்கு அக்கட்சியின் தலைமைக்கும் இதைவிட தலைகுனிவு வேறு இருக்க முடியாது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ கட்சி பத்திரிகையான முரசொலியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இரு வாரங்களாக போலீஸ் தேடும் நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். இதுதொடர்பாக ‘முரசொலி’யில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டு அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி என்பவர் சில வாரங்களாக தலைமறைவாக இருக்கிறார். 

இதைவிடக் கேவலம் எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க.வுக்கும் - அக்கட்சித் தலைமைக்கும் இதைவிடத் தலைகுனிவு வேறு இருக்க முடியாது. ராஜேந்திர பாலாஜியை அழைத்து வந்து தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டிய முதல் கடமை அ.தி.மு.க. தலைமைக்குத்தான் உண்டு!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அகில உலக அரசியலைத் தீர்மானித்து ஐ.நா. அவைக்கே கருத்துச் சொல்லும் பொறுப்பு ராஜேந்திரபாலாஜிக்குத்தான் தரப்பட்டு இருந்தது. அதேபோல் ‘குத்துவெட்டுத்துறை’ அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். ரா.பா. வாயைத் திறந்தால், “வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன்” என்பதுதான் அவரது பாணியாக இருந்தது. 

அவர் புண்மொழிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதைவைத்து வழக்குப் போட்டாலே அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும். ஆனால், ரா.பா. இன்று சிக்கி இருப்பது ஊழல் வழக்குகளில்! ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. சேனல் மைக்குகளைப் பார்த்தால் எதையும், யாரையும் தராதரம் இல்லாமல் பேசும் மஞ்சள் சட்டை மாஃபியா ராஜேந்திரபாலாஜி, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பதுங்கத் தொடங்கினார். மோசடிப் புகார்கள் குவியத் தொடங்கியதுதான் இதற்குக் காரணம்.

ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடியானது. இந்தத் தகவலறிந்து அன்றைய தினமே ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க கடந்த 23 ஆம் தேதி விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இப்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நபரை விமான நிலைய அதிகாரிகள்உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். மேலும், ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை விருதுநகர் மாவட்டப் போலீசார் முடக்கி உள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே 2 மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மோசடி தொடர்பாக விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இவை மொத்தமாக 78 லட்சம் மதிப்பிலான மோசடிக் குற்றச்சாட்டுகள் ஆகும். புகார் அளித்துள்ளவர்களுக்கு சம்மன் தரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. ராஜேந்திர பாலாஜியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய திருப்பத்தூரை அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவை அனைத்தும் ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட விவகாரங்கள் அல்ல. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பழனிசாமியின் அமைச்சரவையில் அமைச்சராகத் தொடர்ந்தவர். இன்று அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருப்பவர். அத்தகைய நபர் தலைமறைவாக இருப்பதை அ.தி.மு.க. தனக்கு ஏற்பட்ட தலைகுனிவாக எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வந்து காவல் துறையிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வந்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அரசியல் செய்திகள் 


முந்தைய அரசியல் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment