வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 15, 2021

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

இருபத்தி ஏழு பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு என்று அறிவிக்கும் அளவிற்கு, அந்த அளவுக்க சாப்பிடும் பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள்.


எந்த ஊருக்கு சென்றாலும் பரோட்டா கடையை பார்க்கலாம். பரோட்டா இல்லாத ஓட்டல்களே இல்லை என்று சொல்லிவிடலாம் . அந்த அளவிற்கு பரோட்டா பிரியர்கள் வளர்ந்து விட்டார்கள்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடும் வயிற்று வலி எடுத்து கர்ப்பிணிப்பெண் அண்மையில் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

உணவு தயாரிப்பு தொடர்பாக தொடர்ந்து இதுமாதிரி அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து மோசமான கடைகளை படம்பிடித்து அம்பலப்படுத்தி விடுகின்றனர்.


ஒரு உணவகத்தில் முதல்நாள் தயாரித்த புரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடு ஏற்றி புதியது போல விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது அந்த உணவகம் . இந்த உணவகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரோட்டாக்கள் தயாரித்து விற்பனையாகி வருகிறது. விற்பனையாகாத பரோட்டாக்களை பாத்திரத்தில் வைத்திருந்து மறுநாள் அதை அப்படியே நீரில் ஊறவைத்து அலசி எடுத்து, பின்னர் கல்லில் போட்டு சூடு ஏற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக வந்தது. இது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு செல்ல , அந்த உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தியபோது பழைய பரோட்டாவை விற்பனை செய்து வந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து அந்த உணவக உரிமையாளருக்கு 2000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு வழக்குப்பதிவு செய்துள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் .இந்த வழக்கின் கீழ் உணவகம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment