வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Theni District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Theni District News. Show all posts
Showing posts with label Theni District News. Show all posts

Thursday, December 23, 2021

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பி.இ.டி வாத்தி.. கேடுகெட்ட செயலுக்கு குடும்பமே ஒத்து..! நண்பன் துரோகியாக பயங்கரம்.!

பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நண்பனின் வீடு என்று நம்பி குடும்பத்தினரை அனுப்பி வைத்ததற்கு, நண்பன் செய்த மாபெரும் துரோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம் பகுதியை சார்ந்தவர் அருள் குமரன் (வயது 39). இவர் ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியபிள்ளைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே வசித்து வருகிறார்.

அவரின் அக்கா மற்றும் 27 வயது அக்கா மகள் நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஆண்டிபட்டிக்கு வந்துள்ளனர். பின்னர், கதிர்நரசிங்கபுரத்தில் இருக்கும் அருள் குமரனின் வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர்.

அப்போது, 27 வயது இளம்பெண் குளிப்பதை அருள் குமரன் ரகசியமாக படமெடுத்து இருக்கிறார். பின்னர், அதனை வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இளம்பெண்ணுக்கும் - அருள் குமரனுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்ததாக போலி புகைப்படமும் தயாரித்து இருக்கிறார்.

இதனை இளம்பெண்ணின் தாயிடம் காண்பித்து, அவரை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என அருள் குமரன் மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அருளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர், அவரிடம் இருந்து ஆபாச படங்களை கைப்பற்றிய நிலையில், அருள் குமரனின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை முருகேசன், தாய் சரோஜா, தங்கை மீனா ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள் குமரன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

தமிழக ரேஷன் கடைகளில்.. முதியவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு வைக்க முடியவில்லை. இது தொடர்பாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்ட்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி நிறைய முறைகேடுகள் நடந்து வருவதாக கூறி, புதியதாக பயோமெட்ரிக் கருவியின் மூலம் குடும்ப தலைவர்கள் அல்லது உறுப்பினர்களின் கைவிரல் பதிவு செய்யப்பட்டது. அதை பயன்படுத்தி ரேஷன் கார்டுகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் முறைகேடுகள் குறைந்துள்ளது.
இருப்பினும் முதியவர்களுக்கு இந்த முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு சரியில்லாமல் இருப்பதால் மீண்டும் மீண்டும் கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக முதியோருக்கு கைவிரல் ரேகை பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக கைரேகை பதிவு வைக்க முடியாத முதியவர்கள், உரிய ரேஷன் கடைகளுக்கு சென்று படிவத்தை பெற்று விண்ணப்பிக்க முடியும். இதனை தற்போது தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மொத்தம் 2700 ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவுக்கு விலக்கு கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். உங்கள் வீட்டிலும் யாருக்காவது கைரேகை வைப்பதில் சிரமம் இருந்தால் அவர்களுக்கு உரிய விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் கைரேகை வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

நியாய விலை கடை செய்திகள் 


முந்தைய நியாய விலை கடை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 16, 2021

ச்ச்சீ மனுஷனா இவன்.. பெற்ற மகளையே கற்பமாக்கிய கொடூர தந்தை.!! டி.என்.ஏ பரிசோதனையில் அம்பலம்..!

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த திருமணமாகாத 16 வயது சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.


இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியும், சிறுமியின் தந்தையான சாமியாரும் சேர்ந்து தேவதானப்பட்டி அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பையன் ஒருவர்தான் இந்த குழந்தைக்கு தந்தை என்று கூறி அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் உறவுக்கார பையனை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனையடுத்து அந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என்று கூறிய அந்த இளைஞர், டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அந்த இளைஞர், சிறுமி மற்றும் பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் அந்த குழந்தை இளைஞருக்கு பிறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தபோது அவர்தான் குழந்தைக்கு உண்மையான தந்தை என்பதும், தன் மகளுடன் பெற்ற தந்தையே பாலியல் உறவு கொண்டு தாயாக்கியதுடன் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று கருதி உறவுக்காரப் பையன் மீது பழியைப் போட்டு அவரை சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த தந்தையை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியையும், சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Wednesday, December 15, 2021

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

இருபத்தி ஏழு பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு என்று அறிவிக்கும் அளவிற்கு, அந்த அளவுக்க சாப்பிடும் பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள்.


எந்த ஊருக்கு சென்றாலும் பரோட்டா கடையை பார்க்கலாம். பரோட்டா இல்லாத ஓட்டல்களே இல்லை என்று சொல்லிவிடலாம் . அந்த அளவிற்கு பரோட்டா பிரியர்கள் வளர்ந்து விட்டார்கள்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடும் வயிற்று வலி எடுத்து கர்ப்பிணிப்பெண் அண்மையில் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

உணவு தயாரிப்பு தொடர்பாக தொடர்ந்து இதுமாதிரி அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து மோசமான கடைகளை படம்பிடித்து அம்பலப்படுத்தி விடுகின்றனர்.


ஒரு உணவகத்தில் முதல்நாள் தயாரித்த புரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடு ஏற்றி புதியது போல விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது அந்த உணவகம் . இந்த உணவகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரோட்டாக்கள் தயாரித்து விற்பனையாகி வருகிறது. விற்பனையாகாத பரோட்டாக்களை பாத்திரத்தில் வைத்திருந்து மறுநாள் அதை அப்படியே நீரில் ஊறவைத்து அலசி எடுத்து, பின்னர் கல்லில் போட்டு சூடு ஏற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக வந்தது. இது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு செல்ல , அந்த உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தியபோது பழைய பரோட்டாவை விற்பனை செய்து வந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து அந்த உணவக உரிமையாளருக்கு 2000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு வழக்குப்பதிவு செய்துள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் .இந்த வழக்கின் கீழ் உணவகம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Friday, March 26, 2021

அதிமுக வேணாம்... திமுக தான் வேணும்... செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி..எங்கே..? | No need ADMK... I want DMK | Vil Ambu News

தேனியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வினோத் குமார் என்பவர் கூலி தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 160 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் அப்பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் எவ்வளவு கூறியும் அவர் கீழே இறங்கி வராமல் இருந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்கள்.