வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குன்றத்தூர் அருகே மத்திய அரசு ஊழியர் குத்திக் கொலை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 16, 2022

குன்றத்தூர் அருகே மத்திய அரசு ஊழியர் குத்திக் கொலை..!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பத்ம குரு என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பத்ம குருவிற்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணிற்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே சிந்து மீனாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த மீனா, அவருடைய கணவர் ரஜினி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் பத்ம குருவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோபமடைந்த பத்ம குரு வீட்டிலிருந்த கத்தியால் மீனாவின் உறவினர்களான குமரன், விஷ்வா ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஷ்வாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பத்ம குருவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிரிழந்த குமரன் மத்திய அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

குன்றத்தூர் ஒன்றிய செய்திகள் 


முந்தைய குன்றத்தூர் ஒன்றிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

1 comment:

  1. J-8 casino bonus, welcome offer, promotions, free spins - KTM Hub
    J-8 casino bonus, 동해 출장안마 welcome offer, 경상북도 출장마사지 promotions, free 광주광역 출장안마 spins. 2021-08-09 04:38. Play for real in demo play. 아산 출장마사지 Casino offers 5 free spins, bonus 경산 출장마사지 spins,

    ReplyDelete