வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இப்படி செஞ்சா கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தியின் ஆட்டம் உங்க வீட்டுல செல்லாது..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 28, 2022

இப்படி செஞ்சா கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தியின் ஆட்டம் உங்க வீட்டுல செல்லாது..!

கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தியின் எந்த ஒரு ஆட்டமும் உங்கள் வீட்டில் செல்லுபடியாகாது. ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டில் இப்படி வையுங்கள்.


சில சமயங்களில் நமக்கு வரக்கூடிய கஷ்டம் என்பது ரொம்ப பெரிய கஷ்டமாக இருக்கும். ஆனால் அதற்கு உண்டான தீர்வு மிக சிறிய அளவிலேயே, நம் அருகிலேயே இருக்கும். ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியாது. இப்போது உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். சில பேருக்கு முதுகு வலி, கழுத்து வலி, கை கால் வலி இதில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கும். அந்த வலிக்கு உண்டான தீர்வை நிறைய மருத்துவர்களிடம் சென்று, நிறைய பணத்தை கொட்டி தேடி இருப்பார்கள். ஆனால் யாரோ ஒருவர் அந்த வலிக்கு பத்து ரூபாய்க்கு சுளுக்கு பேன்டன் வாங்கி ஒட்டுங்கள் சரியாகிவிடும் என்று சொல்லியிருப்பார்கள். கடைசியாக அதை ட்ரை பண்ணி பார்த்திருப்பாங்க. அவங்களோட வலி 2 நாளில் சரியாகி இருக்கும்.

சில சமயங்களில் வாழ்க்கையில் இருக்கும் நம்முடைய பிரச்சனைகளும் இப்படிதாங்க. பிரச்சினைக்கு உண்டான தீர்வை தேடி தேடி சோர்ந்து போய் இருக்கும் சமயத்தில், அந்த கடவுள் மனிதனின் ரூபத்தில் வந்து ஏதாவது ஒரு பரிகாரத்தை சொல்லுவான். அந்த சுலபமான ஒரு பரிகாரத்தை செய்து விட்டு நாம் பிரச்சினையில் இருந்து வெளி வந்து விடுவோம். இது நிறைய பேருடைய வாழ்க்கையில் அனுபவமாகவும் இருக்கும். அப்படி ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டில் துஷ்ட சக்திகளால் பிரச்சனை, பேய் பிசாசுகளால் பிரச்சனை, கண் திருஷ்டியால் பிரச்சனை, ஏவல் பில்லி சூனியத்தால் பிரச்சனை, என்று எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் சரி, வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள், பூஜை புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை, படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நிலையான வேலை இல்லை என்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரி, இந்த எலுமிச்சைப்பழ பரிகாரத்தை செய்து பாருங்கள்.

அம்மன் கோவில்களில், அம்மனின் பாதங்களில் வைத்த எலுமிச்சம்பழத்தை அர்ச்சகரிடம் கேட்டால் கொடுப்பார். அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். உங்களுக்கு எத்தனை எலுமிச்சம்பழம் தேவையோ அத்தனை வாங்கிக்கொள்ளுங்கள். ஒற்றைப்படையில் வாங்கிக்கொள்ளுங்கள் 3, 5, 7, 9 என்ற கணக்கில் வாங்கிக் கொள்ளலாம்.

அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து, ஒரு எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குடித்து விடுங்கள். மீதமிருக்கும் எலுமிச்சம்பழத்தை சிறிது நேரம் பூஜை அறையில் வையுங்கள். அதன் பின்பு ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் நிரப்பி அதன் உள்ளே அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை போடுங்கள். எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் போடுவதற்கு முன்பு உங்களுடைய உள்ளங்கைகளில் அந்த எலுமிச்சம் பழத்தை வைத்து கொண்டு உங்களுக்குப் பிடித்த அம்மனின் பெயரை 108 முறை உச்சரித்து விட்டு அந்த எலுமிச்சம் பழத்தை அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும்.

இப்படி 2 அல்லது 3 டம்ளர்களை கூட தயார் செய்து கொள்ளலாம். உங்கள் பூஜை அறையில் ஒரு தம்ளர். வரவேற்பறையில் ஒரு டம்ளர். படுக்கையறையில் ஒரு டம்ளர். சமையலறையில் ஒரு டம்ளர். இது தவிர உங்கள் வீட்டில் மற்ற அறைகள் இருந்தாலும் அதற்கு தனித்தனியாக ஒவ்வொரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி இந்த எலுமிச்சம் பழத்தை போட்டு அந்த அறைகளில் வைத்து விடுங்கள்.

ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போடும்போதும் அந்த எலுமிச்சம் பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அம்மன் பெயரை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதுதான் மிக மிக முக்கியமான விஷயம். இப்படி செய்துவிட்டு அந்த எலுமிச்சம் பழம் தண்ணீரில் வாடும் வரை அப்படியே விட்டு விடுங்கள். தண்ணீரில் எலுமிச்சம் பழம் வாடிய பின்பு டம்ளரோடு எடுத்துச் சென்று எலுமிச்சம் பழத்தை வெளியே கொட்டிவிட்டு தம்ளரை கழுவி விட்டு, மீண்டும் இதேபோல அம்மன் கோவிலிலிருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து பரிகாரத்தை செய்து வர வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும்.

ஒருவேளை டம்ளரோடு தண்ணீரை எடுத்துக்கொண்டு போய் வெளியில் கொட்ட மண் பாங்கான இடம் இல்லை என்றால், டம்ளரில் இருக்கும் தண்ணீரை சிங்கிள் கொட்டிவிட்டு, எலுமிச்சம்பழத்தை குப்பை தொட்டியில் போட்டு விடலாம். தண்ணீரில் இருக்கும் எலுமிச்சம்பழம் அழுக தொடங்கி விட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் கஷ்டங்கள் தீர இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


ஆன்மீக தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment