வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 🔴[வழிகாட்டி நெறிமுறைகள் ] தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு..! என்னென்ன வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 05, 2022

🔴[வழிகாட்டி நெறிமுறைகள் ] தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு..! என்னென்ன வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்..?

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்காக நாளை (06.01.2022) முதல் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படவுள்ளது.


இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும், கொரோனா பரவல் எதிரொளி காரணமாக ஜனவரி 20 வரை மருத்துவம் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கின்போது பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். இதர மின் வணிகங்களுக்கு அனுமதி இல்லை.

இரவு நேர ஊரடங்கின்போது, மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் பொது, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும். தமிழகத்திற்குள் செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் 50% பயனிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் அறிவுறுத்தல்.

இருந்தபோதிலும், இரவு நேர ஊடங்கின்போது, ரயில், விமானம் மற்றும் பேருந்தில் பயனிப்பவர்களுக்கு சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து. 10,11 மற்றும 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தடையில்லாமல் செயல்படும். இது தவிர கடந்த ஆண்டு ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான அத்தியவாசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி என வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தமிழக செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment