திருக்கோவிலூர் அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், வாலிபர் ஒருவருக்கு போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் அருகே வசித்து வரும் மன்னன் என்பவரது மகன் ஏழுமலை. அவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், 18 வயதான இளைஞர் ஏழுமலை கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment