கடந்த பிப்ரவரி மாதம், பொள்ளாச்சியில் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து, சீரழித்துவந்த கும்பல் ஒன்று, முகநூலில் பழகிய கல்லூரி பெண் ஒருவரை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை உல்லாசம் அனுபவித்து, ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தலைமறைவாக இருந்த கடைசியாக கைது செய்யப்பட்ட மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக் தகவல்களை கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜன், மணிவண்னன் உள்ளிட்ட நான்கு பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், வழக்கின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்ற மக்கள் கொந்தளிப்பை அடக்க முடியவில்லை. உடனடியாக வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீஸார் தங்களது விசாரணையை முடுக்கினர். இந்தச் சூழலில் அடிதடி வழக்கில் தலைமறைவான மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரோடு சேர்ந்து நானும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் பல பெண்களை உல்லாசம் அனுபவித்து, அதை வீடியோ பதிவு செய்தோம் என வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, பொள்ளாச்சி போலீஸார் பதிவு செய்த வழக்கை விடுத்து, இந்த ஐந்துபேர் மீதும் புதிய எஃப்.ஐ ஆரை பதிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இதற்கு முன் இருந்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும் என்ற சூழல் நிலவியது.
ஆனால், தற்போது அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ள இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்துகின்றனர்.
No comments:
Post a Comment