எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கரண்டியால் அடித்து கொன்ற தாய் !
சென்னை அம்பத்தூர் அருகே மேனாம்பேட்டில் முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த மூன்றரை வயது மகனை, தாய் தோசைக் கரண்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தம்பதி சோமசுந்தரம்(26) - புவனேஸ்வரி(21). இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கிஷோர் என்ற மகனும் உள்ளார். இந்த சூழலில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரைப் பிரிந்த புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாக அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு வ.ஊ.சி. நகரில் கார்த்திகேயன்(28), என்பவருடன் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
கணவரைப் பிரிந்த புவனேஸ்வரிக்கு திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் முறையற்ற உறவு இருந்ததாக தெரிகிறது. எனவே மகன் கிஷோர் இவர்களின் கள்ளக்காதலுக்கு மிகவும் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்திகேயன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரைப் பார்த்து கிஷோர் பதட்டமடைந்து அலறி அடித்து அழுவதும், அப்போது கிஷோரை புவனேஸ்வரி அடிப்பதும் வாடிக்கை என்றும் கூறப்படுகிறது.
அவ்வாறு கடந்த 19ஆம் தேதி கார்த்திகேயனை பார்த்து கிஷோர் மீண்டும் அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரி தோசை கரண்டியால் கிஷோரை தாக்கியுள்ளார். அதில் கிஷோருக்கு தொண்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிஷோரை கொண்டு சென்றப்போது வழியிலேயே கிஷோர் இறந்து விட்டதாக தெரிகிறது. இதனால் கொலையை மறைக்க முடிவெடுத்த கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிஷோரின் உடலை திருவாரூர் கொண்டு சென்றுள்ளனர்.
இதனிடையே புவனேஸ்வரியை அலைபேசியில் அழைத்த அவரது தாய் புஷ்பா, பேரனிடம் பேச வேண்டுமெனக் கூறியுள்ளார்.கிஷோருக்கு அடிபட்டுள்ளதாகவும், அவனை திருவாரூக்கு அழைத்து வருவதாகவும் கூறி சமாளித்துள்ளார். இதனைதொடர்ந்து புஷ்பா திருவாரூர் வந்து பார்த்தபோது கிஷோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் புஷ்பா திருவாரூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் போலீசார் விசாரித்தபோது, சிறுவன் கிஷோர் மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதி அம்பத்தூர் என்பதால், உயிரிழந்த சிறுவன் கிஷோர் மற்றும் தாய் புவனேஸ்வரி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் அம்பத்தூர் போலீசாரிடம் திருவாரூர் போலீசார் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அம்பத்தூர் உதவி கமிஷ்னர் கண்ணன் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தார்.
அப்போது இருவரிடமும் தீவிரமாக விசாரித்தபோது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பெற்ற பிள்ளைகளையை ஊட்டி வளர்க்கும் தாய்மார்களுக்கு மத்தியில், மகனை அடித்துக் கொன்ற புவனேஸ்வரியும், அவருக்கு உதவியதாக கார்த்திகேயனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment