வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து.. வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

மசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து.. வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்



சென்னையில் மசாஜ் சென்டர் நடத்த 50 ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிய காவல் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்பு பொலிசார் கையும், களவுமாக பிடித்துள்ளனர். 


மாதா மாதம் மாமூல் கொடுக்க வேண்டும் என மசாஜ் சென்டரில் மிரட்டிய உதவி ஆணையர் சிக்கிய பின்னணி குறித்து தற்போது காணலாம். சென்னை முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மசாஜ் சென்டர் நடத்த லஞ்சம் வாங்கி சிக்கிய உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் இவர் தான்.


சென்னை அசோக் நகர் 4 வது நிழற்சாலையில் அமைந்துள்ளது ரையான் ரெக்ரியேஷன் கிளப். அரசு விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட இந்த கிளப்பின் ஒரு பகுதியில் ரூபா என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அசோக் நகர் சரக உதவி ஆணையராக வின்சென்ட் ஜெயராஜ் பொறுப்பேற்ற பிறகு மாதம் 50 ஆயிரம் மாமூல் கொடுக்க வேண்டும் என மசாஜ் சென்டர் உரிமையாளாரிடம் கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால் அவர் கேட்ட மாமூல் கொடுக்காததால் கடந்த 8-ந் தேதி ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 3 பொலிசாரை மசாஜ் கிளப்பிற்கு அனுப்பி, மசாஜ் சென்டரை மூட வேண்டும் எனவும், இல்லையென்றால் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


நடவடிக்கையை தவிர்க்க அவரை நேரில் சென்று பாருங்கள் என கூறியதால் கிளப் தலைவரான செந்தில்குமார் என்பவர் அசோக் நகர் உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது மாதம் 50 ஆயிரம் மாமூல் கொடு இல்லையென்றால் கடையை மூடு என உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கூறியதாகவும், அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதற்கு வருமானம் இல்லை என கூறியதால், மசாஜ் சென்டரில் தொழில் செய்து கொடு என அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுக்க, அதிகாரிகளின் திட்டத்தின் படி ரசாயனம் தடவிய 50 ஆயிரம் பணத்தை செந்தில் குமார் அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Pages

No comments:

Post a Comment