வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருங்கள்: பிரபல நடிகரை விளாசிய நடிகை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருங்கள்: பிரபல நடிகரை விளாசிய நடிகை!



பிரபல நடிகர் ஒருவர் தனக்கு சில வருடங்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ள மலையாள நடிகை ரேவதி சம்பத், அந்த நடிகரிடம் அவரது மகளாவது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பிரபல பாடகி சின்மயி, உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கடந்த சில மாதங்களாக 'மீடூ' மூலம் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது மலையாள நடிகை ரேவதி சம்பத், பிரபல நடிகர் சித்திக் மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.


கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சித்திக் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், 21 வயதில் நடந்த அந்த கொடூரமான சம்பவம் தனக்கு இன்னும் ஞாபகம் இருப்பதாகவும், சித்திக்கிடம் அவரது மகளாவது பாதுகாப்பாக இருக்கின்றாரா? என்றும் ரேவதி கேள்வி எழுப்பியுள்ளார். ரேவதியின் இந்த சமூக வலைத்தள பதிவிற்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


நடிகை ரேவதி சம்பத் விளம்பரத்திற்காக இவ்வாறு கூறி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment