வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கர்ப்பமாக இருந்தபோதும் படுக்கைக்கு அழைத்தார்கள்! சமீரா ரெட்டி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

கர்ப்பமாக இருந்தபோதும் படுக்கைக்கு அழைத்தார்கள்! சமீரா ரெட்டி!


1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார்.


தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இரண்டாவது முறையாகவும் கர்ப்பமாகியுள்ள சமீரா படங்களில் நடித்தபோது தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகினேன் என்பதை தெரிந்துகொள்ள ஒருவர்கூட ஆர்வம் காட்டவில்லை.



இதனால் திரையுலகமே இப்படித்தான் என்று முடிவு செய்துகொண்டேன். நான் சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமே பெண்களுக்கு இந்த துறையில் பாதுகாப்பு இல்லை என்பதால் தான். என்னை பல தடவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். 



மேலும் நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட படுக்கைக்கு அழைத்த சிலரும் இங்கு உண்டு அதனால் தான் நான் சினிமாவிற்கு முடக்கு போட்டுவிட்டு விலகினேன். சினிமா துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவது முற்றிலும் உண்மை. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத்தான் நடக்கும்.” என சமீரா ரெட்டி கூறினார்.




http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html


அதிகம் படிக்கப் பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment