வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Avadi rape news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Avadi rape news. Show all posts
Showing posts with label Avadi rape news. Show all posts

Saturday, January 18, 2020

சென்னையில், 6 வயது சிறுமிக்கு டியூஷன் என்ற பெயரில் பாலியல் தொல்லை.. கணவனுக்கு உடந்தையாக கொடூர மனைவி...!! Chennai 6 year child sexual harassment

சென்னையில் உள்ள ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (வயது 33). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 


இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (வயது 32). இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் விஜயலட்சுமி, மாலை நேரத்தில் இப்பகுதியை சேர்ந்த சிறுவர் - சிறுமிகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், டியூஷன் படிக்க சென்ற 6 வயது சிறுமிக்கு நரேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது. இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி சிறுமி அழவே, இதனைக்கண்ட சிறுமியின் சகோதரர் இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த தகவலை அறிந்த நரேஷ் மற்றும் மனைவி விஜயலட்சுமி தலைமறைவாகினர்.

இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., கணவன் மனைவி இருவரும் பூந்தமல்லியில் இருக்கும் உறவினரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.