வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Karnataka State News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Karnataka State News. Show all posts
Showing posts with label Karnataka State News. Show all posts

Sunday, January 09, 2022

மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை..! பள்ளியில் பயங்கரம்..!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், கனங்கூர் கிராமத்தில், அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், ஆசிரியையாக பணி செய்து வருபவர் சினேகலதா. இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார்.

வகுப்பறையில் அவர் செல்போனுடன் இருந்ததை பார்த்த ஆசிரியை சினேகலதா மாணவியை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாணவியிடம் தவறாக நடந்து ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 14, 2021

கர்நாடகா எம்.எல்.சி தேர்தலில் பாஜக பின்னடைவு | BJP Fails in MLC Election at Karnataka | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கர்நாடகாவில் எம்.எல்.சி. தேர்தலில் ஆளும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.


 எம்.எல்.சி தேர்தலில் ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சிகள் அதிக இடத்தில் வெற்றி பெற்றது கடந்த 10 ஆண்டில் இதுவே முதன்முறையாகும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, December 12, 2021

20 கிராம் தங்க சங்கிலியை விழுங்கிய பசு.! அறுவை சிகிச்சையின்போது காத்திருந்த அதிர்ச்சி.! | Cow Eated 20 Grams Gold | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பசு மாட்டிற்கு பல வித நோய்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் ஒரு விநோதமான காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.


அது என்ன காரணம்? எதற்காக நன்றாக இருக்கும் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்?

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஶ்ரீகாந்த் ஹெக்டே என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்த குடும்பம் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளது. இவர்களின் குடும்ப வழக்கத்தின்படி பண்டிகை நாட்களில் பசுவை வணங்கி வந்துள்ளனர். அந்த சமயம் பசுவிற்கு தங்க சங்கிலி, பூ மாலை ஆகியவற்றை அணிந்து வணங்குவார்கள். 


அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி அன்று வழக்கம் பசுவிற்கு 20 கிராம் தங்க சங்கிலியை வைத்து வணங்கியுள்ளனர். பூஜை முடிந்த பிறகு அந்த தங்க சங்கிலியை பசுவின் கழுத்திலிருந்து எடுத்து வைத்துள்ளனர்.
அவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அந்த தங்க சங்கிலி அங்கு இல்லாமல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சங்கிலியை வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு பசுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பசு அந்த தங்க சங்கிலியை விழுங்கியிருக்க கூடும் என்று நினைத்துள்ளனர். அவர்கள் நினைத்து போல் அந்த சங்கிலியை பசு தான் விழுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

அதன்பின்னர் சுமார் 30-35 நாட்கள் வரை பசுவின் சாணத்தில் தங்க சங்கிலி வருகிறதா என்று அவர்கள் ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இத்தனை நாள் ஆகியும் சாணத்தில் சங்கிலி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து பசுவை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அவர் சோதனை செய்து பார்த்ததில் பசுவின் வயிற்றில் தங்க சங்கிலி சிக்கியிருந்தது உறுதியானது.

குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் தங்க சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் சங்கிலி எடுத்த பிறகும் அந்த குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 20 கிராம் எடையில் இருந்த சங்கிலி தற்போது வெறும் 18 கிராம் எடையுடன் மட்டுமே இருந்தது. தங்க சங்கிலியின் ஒரு சிறிய பகுதியை காணவில்லை. இது அந்த குடும்பத்திற்கு சற்று அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்.! பதறவைக்கும் பரபரப்பு சம்பவம் | Bangalore Husband Killing his Wife due to Heavy Beauty | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கணவன் தன்னை வீட்டிலையே அடைத்துவைத்தநிலையில், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த வினய் என்பவரும், சங்கீதா என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகேம் இருந்ததாக கூறப்படுகிறது.


மனைவியின் தொலைபேசியை சோதிப்பது, அவரது நடவடிக்கையை கவனிப்பது என தனது மனைவியை சந்தேக பார்வையுடனே வினய் நடத்திவந்ததாக தெரிகிறது. மேலும், நீ அழகாக இருப்பதால் யாரிடமும் பேச கூடாது, பழக கூடாது எனவும் வினய் தனது மனைவியை கொடுமை படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவியை வீட்டிர்க்குள்ளையே அடைத்துவைத்து அவரை வெளியே விடாமல் வினய் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் சங்கீத எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் வினய்யை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் கணவன் கொடுமை படுத்தியாதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Saturday, December 11, 2021

மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவி, பிள்ளைகளை கொன்ற தந்தை! | A Person Killing his Family due to Religion Issue | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் நாகேஸ். இவருக்கு விஜயலட்சுமி என்பருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். கணவர், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நாகேஷின் வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர்.


கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது நாகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது விஜயலட்சுமி மற்றும் அவரது இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

அவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் விஜயலட்சுமியை ஒரு பெண் மதம் மாற்ற முயற்சிப்பதாகவும், அதனால் மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக நாகேஷ் எழுதியிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விஜயலட்சுமியை மதம் மாற்ற முயற்சித்ததாக கூறப்படும் பெண்ணையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்