வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Kattankolathur News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Kattankolathur News. Show all posts
Showing posts with label Kattankolathur News. Show all posts

Thursday, December 09, 2021

காட்டாங்குளத்தூர் பிடிஓ இருவர் ஒரேநாளில் திடீர் பணியிட மாற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு | Kattankolathur BDO Transfer | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 10 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 07.12.2021-ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சார்ந்த பணிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களான டி. ஹரிகிருஷ்ணன் மற்றும் ஆ. சசிகலா செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று, இவர்கள் இருவரின் பணிமாற்றத்திற்கான ஆணையை வழங்கியது.


இவர்களது பணி காலத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிகபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கான பணிகளை பாரபட்சமின்றி  செய்யக்கூடிய அதிகாரிகள் என்ற நற்பெயர் இவர்கள் இருவருக்கும் உள்ளது. 


இந்த சூழலில் திடீரென இருவரும் மாற்றப்பட்டுள்ளது, மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரின் பணி மாற்றம் ஆணையை, மாவட்ட நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தை சார்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்