வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Nagercoil News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Nagercoil News. Show all posts
Showing posts with label Nagercoil News. Show all posts

Friday, December 03, 2021

புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா | Pulavarvilari Mutharamman Temple Karthigai Festival 2021 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா வருகிற 5 - ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு அபிஷே கம் , 8 மணிக்கு தீபாராதனை , இரவு 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 

விழாவில் முதல்நாள் பகல் 11. 30 மணிக்கு சிறப்பு பூஜை , 12 மணிக்கு அன்னதானம் , மாலை 6 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மாத்ரு பூஜை , 6 - ந்தேதி மாலை 6 மணிக்கு பக்தி பஜனை , 6. 30 மணிக்கு திருவிளக்கு பூஜை , 7 - ந்தேதி காலை 8. 30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் , 9 மணிக்கு அலங்கார தீபாராதனை , மாலை 4. 30 மணிக்கு கொலுமேளம் , நையாண்டிமேளம் , 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி அன்னையை வலம் வருதல் , தொடர்ந்து அம்பாள் வாகனத்தில் நகர்வலம் புறப்படுதல் , இரவு 11 மணிக்கு தீபாராதனை , நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.

விழாவின் நிறைவு நாளான 8 - ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.