வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Nam Tamilar Katchi News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Nam Tamilar Katchi News. Show all posts
Showing posts with label Nam Tamilar Katchi News. Show all posts

Sunday, December 12, 2021

பாஜகவுடன் திமுக விரைவில் கூட்டணி வைக்க வாய்ப்பு - நா.த.க தலைவர் சீமான் | NTK Seeman Talk about DMK BJP Alliance | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இசுலாமியர்களை விடுதலை செய்ய தமிழக மறுப்பது ஏன்? சட்டம்தான் தடை என்றால் சட்டத்தை இயற்றிய உங்களால் அதை திரும்பப்பெற முடியாதா? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.


ஆட்சியில் இல்லாத போது அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சி அமைத்த உடன் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், விரைவில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜூவ் காந்தி கொலை மற்றும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பது துரோகம் என்றும், 7 தமிழர் விடுதலை மாநில அரசின் கையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் விடுதலை செய்ய மறுப்பதற்கான காரணம் என்ன என்றும், சட்டம் தடையாக இருக்கிறதென்றால் அதை திரும்பப்பெறவேண்டியதில் என்ன சிக்கல்? என்ற அவர், அதிமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்ட 100 பேரில் இஸ்லாமியர்கள் இல்லை என்று தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களை விடுதலை செய்ய மறுப்பதா இஸ்லாமியர்களின் பாதுகாவளர் என கூறும் திமுக இஸ்லாமியர்களை சிறையில் வைத்து பாதுகாப்பதா? என்று பேசிய அவர், திராவிடம் என்பது பிரமாணர்களும் இஸ்லாமியர்களையும் தவிர்த்து என பெரியார் சொல்லியிருக்கிறார் அங்கிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது என்றும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் பாஜக-விற்கு அடிமைகளாக இருந்தார்கள், தற்போது திமுக பாஜக-விற்கு கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்று சாடினார்.பிஜேபிக்குள் திமுக புகுந்துவிட்டது என்று கூறிய சீமான், ஆட்சியில் இல்லாத போது, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது அனைத்திற்கும் மௌனமாக இருபது ஏன் என்றார். அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆளுநரை பார்த்துவிட்டு வரும் போதெல்லாம் தங்கள் எதிர்ப்பை திமுக மாற்றி வருவதாகவும், தற்போது புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்லவைகளை எடுத்து கொள்வோம் என்று திமுக கூறுவது எந்த மாதிரியான நடவடிக்கை என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் விரைவில் திமுக பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று சீமான் தெரிவித்தார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, April 13, 2021

சீமான், தினகரன், கமல் போடும் கணக்கு இதுதான்! | தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் | Seeman, Kamalhasan, TTV Dinakaran Calculation after Election | Vil Ambu News | Tamil Latest News

தேர்தலுக்கு பின் நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன மனநிலையில் உள்ளன என்பது இதோ...!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இடையேதான் போட்டி என்றாலும் சீமான், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் கூறுகிறது.

சீமான் தொடர்ந்து தனியாகவே களம் கண்டு வருகிறார். முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.

தமிழகம் முழுக்கவே இளம் வாக்காளர்கள் கணிசமாக சீமான் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை நாம் தமிழர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெறாவிட்டாலும் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தினகரன் எஸ்டிபிஐ, தேமுதிக, ஓவைசி கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும் தினகரன் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, கணிசமான வாக்குகள் பெறக் கூடிய தொகுதிகள் எவை என தரம் பிரித்துள்ளார்

அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தினகரன் தரப்பு அதிகம் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.

அதேபோல் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியும் தகவல்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளைப் பெறுவார் என கூறுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறத்தில் கமல்ஹாசனுக்கு வாக்குகள் இல்லை என்கின்றனர். அதனாலே அவர் பல இடங்களில் பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டு கோவையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இதனால் கோவை தெற்கு உறுதியாக தங்களுக்கு கிடைக்கும் என்றும், மேலும் கோவையைச் சுற்றியுள்ள சில தொகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவோம் என கூறுகின்றனர்.