வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: TN Election 2021
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label TN Election 2021. Show all posts
Showing posts with label TN Election 2021. Show all posts

Tuesday, April 13, 2021

சீமான், தினகரன், கமல் போடும் கணக்கு இதுதான்! | தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் | Seeman, Kamalhasan, TTV Dinakaran Calculation after Election | Vil Ambu News | Tamil Latest News

தேர்தலுக்கு பின் நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன மனநிலையில் உள்ளன என்பது இதோ...!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இடையேதான் போட்டி என்றாலும் சீமான், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் கூறுகிறது.

சீமான் தொடர்ந்து தனியாகவே களம் கண்டு வருகிறார். முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.

தமிழகம் முழுக்கவே இளம் வாக்காளர்கள் கணிசமாக சீமான் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை நாம் தமிழர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெறாவிட்டாலும் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தினகரன் எஸ்டிபிஐ, தேமுதிக, ஓவைசி கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும் தினகரன் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, கணிசமான வாக்குகள் பெறக் கூடிய தொகுதிகள் எவை என தரம் பிரித்துள்ளார்

அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தினகரன் தரப்பு அதிகம் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.

அதேபோல் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியும் தகவல்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளைப் பெறுவார் என கூறுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறத்தில் கமல்ஹாசனுக்கு வாக்குகள் இல்லை என்கின்றனர். அதனாலே அவர் பல இடங்களில் பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டு கோவையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இதனால் கோவை தெற்கு உறுதியாக தங்களுக்கு கிடைக்கும் என்றும், மேலும் கோவையைச் சுற்றியுள்ள சில தொகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவோம் என கூறுகின்றனர்.


Monday, April 05, 2021

துட்டு கொடுத்தா தான் ஓட்டு போடுவோம்... ஒழுங்கா கொடுங்க... அதிமுகவுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்! நடுங்கிப்போன அதிகாரிகள் | Namakkal Election News | Vil Ambu News

தமிழக அரசியலில் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு சம்பவம். அதிமுக சரியாக ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சாலை மறியல் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளனர் பொதுமக்கள். 

தமிழகத்தில் இதுவரை 420 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து முறைகேடுகளை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஒருபக்கம் கூறிவரும் நிலையில், இங்கு பொதுமக்களே பணம் கேட்டு சாலை மறியல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் என்ற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிமுக சார்பில் ஓட்டுக்கு அங்கு பணம் கொடுக்கப்படுகிறதாம். ஆனால் ஒரு சிலருக்கு கொடுக்கப்பட்டு ஒரு சிலருக்கு அது

வந்துச்சி பாருங்க கோபம் 
இதனால் "கடும் கோபமடைந்து " கொதித்துப் போயினர் ஊர்மக்கள். டூவீலரை எடுத்துக்கொண்டு நேராக ரோட்டுக்கு குறுக்கே நிப்பாட்டி ஒழுங்காக பணத்தை தருகிறீர்களா இல்லையா என்று கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பணத்தை கொடுங்க 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், பணம் கிடைக்கும் என்று உறுதிமொழி தந்தால்தான் கலைந்து போகும் என்று ஊர்மக்கள் விடாப்பிடியாக சொல்ல.. போலீஸார் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

குற்றச் செயல் 
இதையடுத்து பொது போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததற்காக மூன்றுபேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர் போலீசார். இதன் பிறகு ஓரளவு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்திருந்தும் பொது வெளியில் வந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி பணம் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாழ்வியல் நடைமுறை 
தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவது என்பது ஒரு வாழ்வியல் நடைமுறையாக மக்களின் மனதில் மாறிப் போய் விட்டது இந்த அதிர்ச்சி சம்பவம் உறுதி செய்கிறது. இப்படியான சூழ்நிலை நிலவினால், சுயேச்சைகளும், புதிதாக வந்த கட்சிகளும் எப்படி மக்களின் வாக்குகளை பெற முடியும். இது எப்படி சரியான போட்டியாக இருக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.

Saturday, March 27, 2021

சசிகலாவ ஏமாத்தன அதே ஸ்கெட்ச மோடிக்கும் போட நினைக்கிறாரா இ.பி.எஸ்..? பாஜக வேட்பாளர் பிரசாரத்துல மோடி போட்டோ எங்கே.. நம்பளே போடலனா எப்படி.. ஏமாற்றத்தில் பாஜகவினர்.. முழிக்கும் அதிமுக.. ஆனா மேட்டரே வேறயாம்... | ADMK BJP Confusions | Vil Ambu News

பிரதமர் மோடியின் போட்டோ இல்லாமல், அவர் பெயரைகூட உச்சரிக்காமல் பரவலாக தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. 

தேர்தல் களம் சூடாகி உள்ளது.. கட்சி தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.. அந்த வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது..

பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான அதிருப்தி அதிமுக மீது மக்களுக்கு இந்த முறையும் வந்துள்ளது.. அதிமுகவுக்கு ஓட்டுப் போட ரெடி.. ஆனால் கூட பாஜக இருக்கே.. என்று பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. 

முதல்வர்

இந்த 4 வருடம் எடப்பாடியார் தந்த நல்லாட்சியை மட்டுமே சொல்லி ஓட்டுக் கேட்க முடிகிறதே தவிர, மத்திய அரசை மருந்துக்குகூட சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியாத நிலை, அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழக பாஜகவுக்கும் உள்ளது என்பதே கள யதார்த்தம்.

உதயநிதி ஸ்டாலின்

உதாரணத்துக்கு மதுரை தொகுதியில் எங்கே போனாலும், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்னாச்சு? என்ற கேள்விகள் வேட்பாளர்களிடம் முன்னிறுத்தப்பட்டு வருகிறது. அதைத்தான் முதல் கேள்வியாக மதுரை மக்கள் கேட்கிறார்களாம். 

இதையே இப்போது உதயநிதியும் கையில் எடுத்துக் கொண்டு செங்கல்லோடு பிரசாரங்களை அனல் பறக்க வைக்கிறார். பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பற்றி கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர் பொதுமக்கள்.. ஆனால், இதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், மறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் பரிதாப நிலைமைக்கு அதிமுக இன்று தள்ளப்பட்டுள்ளது. 

வாடை

அதாவது பாஜக வாடையே வராமல், கவனத்துடன் பிரச்சாரங்கள் நடந்து வருகிறதாம்.. பிரச்சாரம் மட்டுமல்ல, பாஜக தலைவர்களின் போட்டோக்கள், பெயர்கள் என எதையுமே காணோம்.. தப்பித்தவறி மோடியின் பெயரைகூட எங்குமே சொல்லாமல் கவனத்துடன் பிரச்சாரத்தை கையாண்டு வருகிறார்கள் அதிமுகவினர். 

எம்ஜிஆர்

என்னதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கைக்குள் போட்டுக் கொண்ட நினைப்பில் பாஜக இருந்தாலும், இந்த நிமிடம் வரை, இறந்துபோன எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் அதிமுகவுக்கு உயிர் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.. ஜெயலலிதாவைக் காட்டித்தான் பாஜகவுக்கே வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்ட்டுள்ளதாம். நடிகை குஷ்பு கூட தனது பிரசார விளம்பரத்தில் ஜெயலலிதா படத்தைத்தான் போட்டுள்ளார். மோடி படம் இடம் பெறவில்லை.

பாஜக தலைவர்கள்

வாக்காளர்களை கவருவதற்காக அதிமுக தலைமை இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுத்திருந்தாலும், இது பாஜகவுக்கு ஒரு சரியான சவுக்கடி என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

அதிமுகவை கடந்த பல மாதமாக, விரட்டியும் அழுத்தம் தந்தும் கூட்டணி வைக்க தெரிந்த பாஜகவுக்கு, இதே கூட்டணிக்காக பலமுறை தமிழகத்துக்கு படையெடுத்து வந்த பாஜக தலைவர்களுக்கு, இப்போது ஏன் இங்கு வந்து பிரச்சாரத்தை கையில் எடுக்க தோணவில்லை? 

ராகுல் காந்தி

ராகுல் காந்தி அத்தனை முறை இங்கு வந்தாரே, அவர் கூட்டணி குறித்தா பேசினார்? அது சம்பந்தமாக அறிவாலயம் பக்கம் அவர் சென்றிருப்பரா? கிடையாது.. மக்களை வந்து சந்தித்தார்.. மக்களிடம் நேரடியாக நெருங்கினார்.. கூட்டத்தோடு கூட்டமாக அவர்களை அரவணைத்தார்.. "அண்ணா" என்ற அடைமொழியை அனைத்து சகோதரிகளுக்கும் தந்துவிட்டு சென்றார்..

அதிமுக

மதுரையில் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்டுள்ள கோயிலில் பிரதமர் மோடி படம் இருக்கிறதாம்.. அப்படி என்றால், அதிமுகவின் இலவச திட்ட அறிக்கைகளில் ஏன் அவரது படம் பொறிக்கப்படவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.. அன்று அமித்ஷா சென்னை வந்தபோது, அவரை வரவேற்க வந்த கூட்டத்தில் பாஜகவினரைவிட அதிமுகவினரே அதிகமாக தென்பட்டார்களே, எப்படி? 

முத்தலாக்

அன்றும் இப்படித்தான், முத்தலாக் சட்ட விவகாரம் உச்சத்தில் இருந்தபோது இடைத்தேர்தலை அதிமுக சந்திக்க நேர்ந்தது.. வேலூர் தொகுதி எங்குமே பாஜகவின் நிழல்கூட படியாமல் கவனத்துடன் பார்த்து கொண்டது.. எந்த தலைவர்களின் பெயரையும் தவறிகூட உச்சரிக்காமல் பிரச்சாரத்தை நாசூக்காக முடித்தது.. அப்படி இருந்தும் தோல்வியைத்தான் பெற முடிந்தது.. 

ஓட்டு வேட்டை

இப்போதும் அப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.. பிரதமர் பெயரை பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பும் என்பதால் பாஜகவினரே மோடியை தவிர்ப்பதாகவும் தெரிகிறது.. இப்போதைக்கு ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் வைத்து மட்டுமே அதிமுக கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

Thursday, March 25, 2021

தமிழக அதிமுக, பாஜக வேட்பாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து மக்கள் சக்கி இயக்கத்தின் மாநில தலைவர் கலைமகன் எஸ்.வெங்கடேசன் | Anaithu Makkal Sakthi Iyakkam | Kalaimagan Dr.S. Venkatesan | Vil Ambu News

தமிழக தேர்தல் களம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் பரபரப்பிற்கு பஞ்சமின்றி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான அ.தி.மு.க மற்றும் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை அனைத்து மக்கள் சக்தியின் மாநிலத் தலைவர் கலைமகன். டாக்டர் எஸ்.வெங்கடேசன் நேரில் சந்தித்து ஆதரவு அளித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜா.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் நிலையில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் கோட்பாடுகள் மற்றும் ஆதரவு குறித்து எடுத்துரைத்து பொதுமக்களிடம் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-விற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அவர் இதுவரை எந்தெந்த தேதிகளில் எந்தெந்த வேட்பாளர்களை சந்தித்து ஆதரவு அளித்துள்ளார் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

சைதாப்பேட்டை

கடந்த 13.03.2021 அன்று அதிமுக சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்யூர்

கடந்த 15.03.2021 அன்று அதிமுக சார்பில் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கணிதாசம்பதை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆயிரம் விளக்கு:

கடந்த 15.03.2021 அன்று அ.தி.மு. கூட்டணி கட்சியான பா.. சார்பில் ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு சுந்தரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர், பாரதிய ஜனதா கட்சியில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர். அதுமட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த தமிழக திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


திருப்போரூர்:

கடந்த 17.03.2021 அன்று அ.தி.மு. கூட்டணி கட்சியான பா.. சார்பில் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருக்கச்சூர் ஆறுமுகத்தை (Ex. M.L.A) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


விருகம்பாக்கம்:

அதிமுக சார்பாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் விருகை வி. என்.ரவியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


மைலாப்பூர்:

கடந்த 17.03.2020 அன்று அதிமுக சார்பில் மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும். ஆர்.நடராஜை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்  என்பது குறிப்பிடத்தக்கது.


பல்லாவரம்

கடந்த 17.03.2021 அன்று அதிமுக சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரனை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


செங்கல்பட்டு

கடந்த 17.03.2021 அன்று அதிமுக சார்பில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் காஜா என்கிற கஜேந்திரனை  நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர்  காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தாம்பரம்

கடந்த 17.03.2021 அன்று நேரில் அதிமுக சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.டி.கே.எம்.சின்னையாவை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர், அனைத்துலக எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆலந்தூர்:

கடந்த 21.03.2021 அன்று அதிமுக சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிரங்கியுள்ள பா.வளர்மதியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் அ.தி.மு.க-வின் இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் போன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்ணாநகர்:

கடந்த 22.03.2021 அன்று அதிமுக சார்பில் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கோகுல இந்திராவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் அ.தி.மு.க-வில் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 


பா.ஜ.க.நிர்வாகிகள் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார்.


மகளிர் தின கொண்டாட்டம்

கடந்த 08.03.2021 அன்று பாஜக-வைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனை மகளிர் தினத்தன்று நேரில் சந்தித்தார். இவர் முன்னாள் கப்பல் துறை அமைச்சராகவும், இணை அமைச்சராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. மகளிர் தினத்தன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக அனைத்து மகளிருக்கும், அன்னையருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களையும் அன்னையர் தின வாழ்த்துக்கள் கலைமணி டாக்டர். எஸ் வெங்கடேசன் தெரிவித்தார்.


இந்த சந்திப்புகளின்போது மாஸ்டர் V..பொ.சி குடும்பத்தினர், செ.கலையரசி, இலக்கிய அணி செயலாளர், ஜோ.கீர்த்தி மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சில முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.